பக்கம்:தரும தீபிகை 4.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. கா ம ம் 1531 மறைந்திருக்க காஞ்சனன் என்னும் வி ஞ் ைச ய ன் தனது மனைவியை நாடி வருகிற சோரன் என்று மாருக எண்ணி வெகுண்டு பாய்ந்து இவனே வெட்டி வீழ்த்தினன். பரிதாபமாய் மாண்ட இவனது முடிவு நாடெங்கும் நெடிய கவலையாய் நீண் டது. காம காபம் பழிகேடுகளை விளைத்து அழி துயர் செய்யும் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன். காமம் மண்டினுல் கதி கண்டார் யாரே? அறிவைப் பாழாக்கிக் காம வெறி அதோ கதியில் ஆழ்க் தும் ஆதலால் உயர் கதிகள் யாதும் காணமுடியாமல் மனிதன் பேதையாய் இழிந்து பெருந்துயரமாய் அழிந்து போகிருன். காம காபம் உ ள் ள க் ைத ப் பற்றிக் கொள்ளுதலால் உயிர் கொடிய வேதனைகளை அடைகின்றது. அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறம்சுடும்-வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம் அவற்றினும் அஞ்சப் படும். (1) ஊருள் எழுந்த உருகெழு செந்திக்கு நீருட் குளித்தும் உயலாகும்---நீருட் குளிப்பினும் காமம் சுடுமே குன்றேறி ஒளிப்பினும் காமம் சுடும். (நாலடியார்) காமத் தி உள்ளே மண்டி எழுந்தால் அந்த மனிதன் எந்த வகையிலும் உய்யமுடியாமல் எவ்வழியும் அவலமாய்த் தவிப் பான் என்பதை இவை சுவையாப்,உணர்த்தியுள்ளன. தேமிடை நாவல் வேலிச் செழுமணற் குவாலும் குன்றும் பூமிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரணம் ஆகா! தாமுடை மனமும் கண்ணும் கிறைவும் தம்பால ஆகா: காமுடை மனத்தி ர்ைகட்கு யாருளர் களைகண் ஆவார்? (கு ளாமணி | எண்ணம தலாமை பண்ணும்; இற்பிறப் பிடிய நூறும்; மண்ணிய புகழை மாய்க்கும்; வரும்பழி வளர்க்கும்; மானத் கிண்மையை உடைக்கும்; ஆண்மைதிருவொடு சிதைக்கும்சிங்தை கண்ணுெடு கலக்கும் மற்றிக் கடைப்படு காமம் என்ருன். (யசோதாகாவியம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/378&oldid=1326544" இலிருந்து மீள்விக்கப்பட்டது