பக்கம்:தரும தீபிகை 4.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L534 த ரும தீ பிகை காதளவும் அடர்த்துகுழை கடந்து குமிழ் மறித்து பொருங் கயலைச் சீறும் பேதையர்கட் கனபாயும் அவ்வளவே அல்லாது பின்னும் உண்டோ? (4) செங்குமுக வாயதரச் சேயிழையார் நேயம் எவர் திறம்ப லாவார்? அங்கவர்தம் பார்வையினல் ஆர்க்குமனம் கரைக்துருகாது? அதுவுமன்றி இங்கெனது பேர்ஞாலத்து எவ்வளவுண்டு அவ்வளவும் எவரே மாயக் கங்குல்விடிக் திருள்கழித்துக் கண்ணும் விழித் துணர்விதெனக் காண வல்லார்?" (5) (மெய்ஞ்ஞான விளக்கம்) மோகன் என்னும் மன்னன் எதிரே நின்று காமன் இன்ன வா.ற கூறியிருக்கிருன். "அருவமான அந்த ஒரு பரம்பொருளைத் தவிர உருவமுடைய எவரையும் நான் அடக்கியுள்ளேன். என் அனுடைய ஒரு பூங்கணேயால் அகில வுலகங்களும் மயலுழந்து கிடக்கின்றன. எனது சேனை ஆகிய பெண்கள் கண்களால் நோக்கிய அளவிலேயே ஆடவர் எவரும் பாடழிந்து பரிசு குலேந்து குருவளியில் அகப்பட்ட இலவம் பஞ்சு போல் நெஞ்சு சுழன்று நிலை கடுமாறி உ ழலுகின்றனர். தையலார் மையலில் வையம் மட்டுமன்று வானமும் கொப்யதாயிழிந்துள்ளது. தேவ தேவரும் என் வசமாய் அடங்கியிருக்கின்றனர். தன் தேகத்தில் ஒரு பாகத்தையே பெண்ணுக்குக் கொடுத்துச் சிவன் நாளும் கண்டு களித்து வருகிருன். தையல் பாகன், மாதொரு பங்கன், பெண்மை பாதியன் என்னும் பெயர்களால் இவ் வுண்மையை கன்கு உணர்ந்து கொள்ளலாம். மங்கையைப் பாகத்தில் அரன் வைத்திருத்தல் போல் அரி ஆகத்தில் வைத்துள்ளான். திருமக ளிடம் பெருமால் கொண்டுள்ளமையால் திருமால் என்று அவ இவக்கு ஒரு பெயரும் வந்தது. தேவ தேவருமே இவ்வாறு பெண் ஆவலில் பெருகியிருத்தலால் மண்ணில் வாழும் மானிடர் மையல் கோயால் மறுகியுழல்வதை உரை செய்ய வேண்டுமோ? அரிய பல் கலைகளையும் பயின்று தெளிந்து பெரிய மேதைகளான சகல -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/381&oldid=1326547" இலிருந்து மீள்விக்கப்பட்டது