பக்கம்:தரும தீபிகை 4.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. க | ம ம் 1535 ஆர்டு " வல்லவர்களும் அறிவு முழுவதும் பறிபோப் அரிவையர் ஆசையில் பேதைகளாய் இழிந்துள்ளனர். நான் இருக்கும் வரையும் அறிவு தெளிந்து நெறியே ஒழுகி எவனும் உயர்கதியைக் காண முடியாது” எனத் தனது விரப் பிரதாபத்தை விரித்துக் காமன் இப்படிப் பேசியிருக்கிருன். பாசுரங்களில் பதிந்துள்ள பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். பெண்மையிடம் ஆண்மை பெரு மோகமாய் மயங்கி உயங்கி யுள்ள உண்மையை ண்மையாக இனிது விளக்கி யிருக்கிருன். 'மத்து ஏறி உடைதயிர் போல் மனம் சுழன்று' என்றது காமப் பித்து ஏறிய பொழுது மனிதர் படும் இழி நிலையை விழி தெரிய விளக்கியது. மாயவெறி யாவரையும் பேயராக்கியுளது. பல்லாயிரம் பகைவர்களை ஏக காலத்தில் வெல்ல வல்ல வீரரும் காமத்தின் எதிரே எளிதே தாழ்ந்து வறிதே விழ்ந்துள் ளனர். இராவணன் அதிசய வீரன். அமரர் குலத்தையும் அசுரர் குழுவையும் ஒருங்கே வென்று மூவகை உலகங்களையும் ஏக போகமாப் ஆண்டு வந்தவன். ஒரு நாள் சீதையைக் கண்டான். காம நோய் கொண்டான். உருகி மறுகித் தனது பெருமிதங்க ளெல்லாம் ஒருங்கே இழந்து அடியோடு அழிந்தான். உண்ணுகே உயிர்உண்ணுது ஒருநஞ்சும் சனகிஎனும் பெருநஞ்சு உன்னைக் கண்ணுலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் களப்பட்டாயே எண்ணுதேன் எண்ணியசொல் இன்றினித்தான் எண்ணுதியோ? எண்ணில் ஆற்றல் அண்ேை வா! அண்னவோ! அசுரர்கள்தம் பிரளயமே அமரர் கூற்றே! (1) போர்மகளைக் கலைமகளைப் புகழ்மகளைத் கழுவியகை பொருமை கூரச் சீர்மகளைத் திருமகளைத் தேவர்க்கும் தெளிவரிய தெய்வக் கற்பின் பேர்மகளைத் தழுவுவான் உயிர் கொடுத்துப் பழிகொண்ட பித்தா பின்னைப் பார்மகளைத் தழுவினையே திசையானப் பணையிறுத்த பணத்த மார்பால். (இராமாயணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/382&oldid=1326548" இலிருந்து மீள்விக்கப்பட்டது