பக்கம்:தரும தீபிகை 4.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 2:28 த ரும தீ பி ைக 'தாப்மை நன்மையுடைய உண்மை யுலகமே புத்தகங்கள்’ என வேட்ஸ் வொர்த் என்பவர் இவ்வாறு குறித்துள்ளார். இவ்வாறு அறிவு நலங்கள் செறிந்த நூல்களைப் பயின்று வரின் அவர் சிறந்த அறிவாளிகளாய் உயர்ந்து திகழ்கின்ருர்; அங்ங்னம் பயிலா தவம் அறிவிலிகளாய் இழிந்து நிற்கின்ருர். கல்லாமல் சொல் அளவில் காணுமகன் பேசுகின்ற பொல்லா மிருகம். கல்வியில்லாதவனே இது இங்கனம் சுட்டிக் காட்டியுள் ளது. மிருகங்கள் இயற்கையறிவோடு இருக்கின்றன; உண்னு கின்றன, உறங்குகின்றன; பெட்டைகளோடு கூடுகின்றன; குட்டிகளைப் போடுகின்றன. இயற்கை அறிவோடு கூடியுள்ள மனிகனும் உண்டு உறங்கிப் பெண்டுகளைக் கலந்து பிள்ளைகளைப் பெற்று விடுகிருன். அந்தக் காட்டு மிருகத்திற்கும் இந்த நாட்டு மனிதனுக்கும் வேற்றுமை என்ன? எனின், அ.து பேசாது; இவன் பேசுவன். வாயடங்க நோயடங்கும் என்றபடி பேசாமை யால் யாதொரு பிழையும் நேராது. இவன் பேசுவதால் இடர் கள் பல நேர்கின்றன. குறும்பு பேசிக் கோள் மூட்டிப் பொப் புகன்று புறங்கூறிப் பயனில்லாத சொற்களைப் பாரித்து உரைத்து வருதலால் பிறர்க்கு அல்லல்கள் ஆகின்றன. ஆகவே பேசாத அந்த மிருகத்திலும் பேசுகின்ற இந்த மனிதன் மிகவும் கொடிய வனகி ன்ருன் 軒 கல்லாத இவனது கடுமையும் கொடுமையும் மடமையும் தெரியப் பேசுகின்ற மிருகம், பொல்லாத மிருகம் என விதந்து சொல்ல நேர்ந்தது. பேச்சும் மூச்சும் உயிர் உண்டு என்று காட்டுமே பன்றி வேறு உயர்ந்த மாட்சிகளை யூட்டா. பேசத் தெரிந்த அளவில் மனிதன் உயர்ந்தவன் ஆகான்; அந்த வாய்மொழியோடு தன் தாய் மொழியையும் ஒரளவு நன்கு கற்றுக் கொள்ளவேண்டும்; அங்கனம் கற்கவில்லையானுல் முன் னேர்களுடைய பெரிய எண்ணங்களையும் அரிய அறிவு நலங்களை யும் அவன் இழந்தவனகிருன், அக்க இழவு இழிபழிகளை விளைத்து அவனே ஈனன் ஆக்கி விடுகிறது. இலங்கு நூல் கல்லாதான் விலங்கு என்ருர் காயர்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/73&oldid=1326226" இலிருந்து மீள்விக்கப்பட்டது