பக்கம்:தரும தீபிகை 4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி | 233 பிற அழகுகள் திலே திரிந்து அழியும்; கல்வி அழகு எ ன்றும் &ெலயாய் கின்று நிலவும். எவ்வழியும் அழியாக இக்க அழகை புடையவன் யாண்டும் திவ்விய மகிமைகளை அடைந்து வருகிருன். கற்ருேர் க்குக் கல்வி நலனே கலனல் லால் மற்ளுேர் அணிகலம் வேண்டாவாம்---முற்ற முழுமணிப் பூனுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகு செய்வார். (நீதிநெறி விளக்கம், 13) மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும் உகிர்வனப்பும் கர்தின் வனப்பும்---செயிர்,திர்ந்த பல்லின் வனப்பும் வனப்பல்ல நாற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு. - (சிறுபஞ்சமூலம், 87) இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும் நடைவனப்பும் நாணின் வனப்பும்-புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ைேடு எழுத்தின் வனப்பே வனப்பு. (ஏலாதி, 75) கல்வியே அழகு எனக் குறித்துக்காட்டி அகன்மகிமையை விளக்கி வந்துள்ள இவை இங்கே நன்கு காணத்தக்கன. இத்தகைய கல்வியை இழந்திருப்பது எத்தகைய இழிவு எவ்வளவு இழவு! அவ்வளவையும் செவ்வையாகச் சிந்திக்க வேண்டும். இழி நிலையை உணராமல் வாழ்வது ஈனமேயாம். விழி இல்லா மெய்யே போல் பழியே. கல்லாமையின் இழிவைக் தெளிவாகக் காட்ட இவ்வுவமை வந்தது. கண் இல்லாத உடல் போல் கல்வி இல்லாக உ யிர் என் றது இருளடைந்திருக்கும் அதன் மருள் கிலே தெரிய. கல்லாதவன் அறிவு நலம் குன்றி உ யிரொளி மங்கி வறிகே இழிந்திருப்ப்ன் ஆதலால் கொடிய குருடன் என நின்ருன். கண்ணுடையர் என்பவர் கற்ருேர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். (குறள், 393) | கற்றவர் நிலையும் கல்லாதவர் புலேயும் இங்ங்னம் இது ஒருங்கே காட்டியுள்ளது. கண் அனேய அருமைக கல்வியை இழந்து மனிதன் சிறுமைப்பட்டிருப்பது பெரியபரிதாபமேயாம். 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/78&oldid=1326231" இலிருந்து மீள்விக்கப்பட்டது