பக்கம்:தரும தீபிகை 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. க ல் வி Lo | தன் குடிகளை இனிது கழுவிச் செங்கோல் செலுத்தும் அர னது அடிகளே உலக முழுவதும் உவந்து கழுவி நிற்கும்’ என வள்ளுவப் பெருந்தகை இங்ஙனம் உணர்த்தி புள்ளார். முடி யாட்சி முடிவின்றி நிலைத்துவருகற்கு வழிகாட்டி வகுத்தபடியிது. மன்னன் இன்னவாறு ஒழுகவேண்டும் என அவனுக்கு றுதி கூறி அறிவு போதித்திருக்கும் அருமை கருதியுனரவுரியது. விஞர் ஆட்ட யாவரும் ஆடுகின்றனர்; அவர் காட்ட எல்லா ரும் காணுகின்றனர். எவ்வழியும் பாருக்கும் அடங்காத தனித் தலைமையாளர் ஆதலால் உலக காவலருக்கும் உறுதி கலங்களை உரிமையோடு அ.அறு தியிட்டு இடித்து அவர் அறிவுறுத்து கின்றனர். “The poet is not any permissive potentate, but is emperor in his own right.” (Emerson) :கவிஞன் எந்த வகையிலும் பாருக்கும் அடங்கினவனல் லன், தனது உ ரிமையில் அவன் தனியான ஒரு சக்கரவர்த்தி' என அமெரிக்க ஞானியான எமர்சன் இவ்வாறு கூறியுள்ளார். இத்தகைய தலைமைக் கன்பையில் நிலைத்திருக்கலினலேதான் அவர் சொல்லே உலக மெல்லா ம் உவந்து கேட்டு ஒழுகி வருகின் றன. அவரது உணர்வொளிகள் ஊழியும் மங்காமல் ஒளி புரிந்து மிளிர்கின்றன. கித்திய உண்மைகள் கிலேத்து நிலவுகின்றன. - உள்ளுந்தோறும் ள்ளம்மகிழ, உணர்வு திகழ, உயிர் உயர வள்ளுவர் வாய் மொழிகள் வழங்கி வருதலே வையம் வாழ்த்தி வருகிறது. பாவேந்தர் காவேந்தித் தந்த அறிவுணவு அந்தண் அமிர்தம் கவிராசர்கள் உலகத்திற்குச் செய்து வருகிற உதவி நலங் களை இது உணர்த்தியுள்ளது. அமிர்தம் என்பது தேவ போக மான திவ்விய உணவு. சுவை விரியங்களில் தலை சிறந்தது. தன்னை உண்டவர்களே கெடிது வாழச் செய்வது. அந்த அவி யுனவு கவியுனவோடு இங்கே எதிர் காண வந்தது. மொழிகளின் வழியே கவிஞர் அருளுகிற விழுமிய எண் னங்கள் எவ்வழியும் உவகைகளை பூட்டி உணர்வை ஒளி செய்து உயிரை உயர்த்தியருளுதலால் அந்த அறிவுனவு அமிர்தம் என அமைந்தது. ஆன்ம போதம் அதிசய ஆனந்தமாயது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_4.pdf/96&oldid=1326249" இலிருந்து மீள்விக்கப்பட்டது