பக்கம்:தரும தீபிகை 5.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1640 தரும தீபிகை செய்தி வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இருநிதியம்-வையத்து அறும்பாவம் என்ன அறிக் கன்றிடார்க்கு இன்று வெறும்பானே பொங்குமோ மேல். (நல்வழி, 17) முன்பு பிறர்க்கு இட்டு உண்ணுகவர் பின்பு பட்டினி கிடந்து பதைக்க நேர்வர் என ஒளவையார் இவ்வாறு சுட்டிக் காட்டியிருக்கிருர். ஒருவன் செய்த தீவினையானது வறுமை முதலிய துயரங்களை ஊட்டி அவனே வாட்டி வதைக்கும் என்ப தை நம் பாட்டியார் இப் பாட்டில்இங்கோன்குவிளக்கியுள்ளார். தான் செய்த ைேம கன்னே விடாது வந்து அடுதுயர் செய் யும் ஆதலால் படு துயரங்களுக்கெல்லாம் தானே காரணன் என்னும் உண்மையைப் பூரணமாக எவன் உணர்ந்து கொள்ளு கிருனே அவன் அன்றே தீவினை களிலிருந்து விலகினவளுகிருன். ஒரு பிறவியில் செய்தது வரு பிறவிகளிலும் அருவமாய்ப் புகுந்து பருவரல் புரியும் ஆதலால் தீவினை மிகவும் பயங்கரமா னது. தன் உயிர்க்கு நெடிய துயரத்தை விளைத்துக் கொள்வது எவ்வளவு கொடிய மடமை. எத்துணை மருள்! உய்த்துணர வேண்டும். அயலே இன்னல் செய்வது கன்னேயே கொல்வதாம். வேதனை விளைப்பதில் தீ மிகவும் கொடியது. அங்கத் தீயி லும் தீவினை பெரிதும் தீயதாம். தீ தொடட்போது மாத்திரம் உடம்பைச் சட்டு வருக்தும்; மருந்து முதலிய சாதனங்களால் அவ் வேதனை நீங்கிப் புண்ணும் ஆறிவிடும். செய்த தீவினை அவ் வாறு எளிதில் தீராது. தன்னைச் செய்த அவ்வுடம்பு அழிந்தா அம் உயிரை விடாமல் தொடர்ந்து புகுந்து பிறவிகள் தோறும் படர்ந்து வருத்திப் பெருக்துயரங்களை அது விளைத்து வரும். அல்லித்தாள் அற்ற போதும் அருகநூ லதனப் போலத் தொல்லைத்தம் உடம்பு நீங்கத் தீவினை தொடர்ந்து நீங்காப் . புல்லிக்கொண்டு உயிரைச் சூழ்ந்து புக்குழிப்புக்குப் பின்னின்று எல்லையில் துன்ப வெங் தீச் சுட்டு எரித்திடுங்கள் அன்றே. (சீவக சிந்தாமணி, முத்தி 278) தீவினை ஆகிய தீ உயிர் புக்க இடம் எல்லாம் புகுந்து அதனைச் சுட்டு எரிக்கும் என இது குறித்திருக்கிறது. பவன மாதேவன் என்னும் மன்னன் தனது மகனுக்கு இன்னவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/101&oldid=1326658" இலிருந்து மீள்விக்கப்பட்டது