பக்கம்:தரும தீபிகை 5.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. ைம 1641 திேயைப் போதித்திருக்கிருன். செய்த விேனை செய்தவனே விடாது ஆதலால் தன் செயலில் யாதொரு துேம் நேராகபடி பாதுகாத்து ஒழுக வேண்டும் என்னும் இப்போதனை அந்த இராச குமாரனுக்குப் பெரிய உள்ளத் தெளிவை உணர்த்தி யருளியது. உயர்ந்த சீவ தயாபரனப் ஒளிமிகப் பெற்று அவன் உப்தியை அடைந்தான். அருள் நிலை அதிசய சலன உதவியது. பகைமை பொருமை மடமை முதலிய காரணங்களால் மனிதன் பிறர்க்கு இடர் செய்ய நேர்கின்றன். தான் செய்த இமை தனக்கே மீண்டு வந்து நீண்டதுயரங்களை கெடிது விளைக் கும் என்பதைச் சிறிதேனும் சிங்கன செய்து நோக்குவானுயின் எந்தவகையிலும் அதனை அவன் தீண்டாமல் விலகிவிடுவான். அறியாமையால் அவலக் கேடுகளை விளைத்துக் கொள்ளுகிருன். நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (குறள்- 820) பிறர்க்குச் செய்கிற துன்பங்கள் எல்லாம் தன் மேலேயே பெருகி வந்து விழும்; இது இயற்கை விதியின் நியதி. ஆகவே தாம் துன்பம் இல்லாமல் இன்பமாய் வாழ விரும்புகின்றவர் யாதொரு தீமையும் செய்யார் எனப் பொய்யாமொழி இங்கனம் கூறியுள்ளது. தீமையை மறந்த போதுதான் சேமம் சுரந்து வருகிறது; இந்த கேமத்தை கினேந்து கொள்ள வேண்டும். 686 மெய்யிருக்க நல்ல வினையிருக்க மேவாமல் பொய்யிருக்கும்புன்மைதனைப்போற்றியே-வையமய்யல் பூண்டு மனிதர் புலேயாடி ஒடியே மாண்டு மடிகின்ருர் மண். (சு) இ-ள் சத்தியமும் நல்ல உத்த கருமங்களும் எத்திசையிலும் செய்யவுரியன வாயிருக்கின்றன; இருந்தும் அவற்றைப் பேணி மழுகாமல் வினே பொய்யும்புலைகளும் புரிந்து வெப்யநிலைகளில் இழிந்து மனிதர் அகியாயமாப் மாய்ந்து மடிகின்றனர் என்க. சக்தியத்தைக் கழுவி வரும் அளவே மனிதனுடைய வாழ்வு புனிதமாய் மருவி வருகிறது. மெய் ஒன்று சிதைந்தால் 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/102&oldid=1326659" இலிருந்து மீள்விக்கப்பட்டது