பக்கம்:தரும தீபிகை 5.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1642 த ரும தீபிகை மேன்மைகள் யாவும் சிதைந்து போகின்றன. போக்கின் புலை தெரியாமையால் பொய்யராயிழிந்து வெய்ய நிலையில் மக்கள் மறுகி புழலுகின்ருர், உண்மை வாய்மை மெய்மை என்பன மனம் மொழி மெய்களை இனமாத்தழுவி வந்துள்ளன. வாயாலும் மனத்தாலும் காயத்தாலும் மெய்யைப் பேணி வரவேண்டும் என்பதை இந்தப் பரியாய நாமங்கள் பாங்காயுணர்த்தி யுள்ளன. உண்மையால் உள்ளம் அாய்மை ஆகின்றது. வாய்மையால் வாக்கு மகிமை அடைகின்றது. மெய்யால் மேனி மேன்மை யுறுகின்றது. கள்ளம் யாதும் இன்றி உள்ளம் தாய்மையாய் உள்ள தை உள்ளபடி பேசி வருவதே சத்தியம் என ஒத்து உணர்ந்து வருகிருேம். நீரால் உடம்பு சுத்தம் ஆகல் போல், சத்தியத்தால் உயிர் புனிதமாய் உத்தம நிலையை அடைகின்றது. நீரால் கழுவா விடில் உடல் அழுக்குப் படிந்து இழுக்குப் படும்; வாய்மை கோயாவழி உயிர் தூய்மை இழந்து தீமையா யிழிவுறும். மெய் மேலான மேன்மையை அருளுகிறது. பொய் கீழான தாழ்மை யையே தருகிறது. மெய்யுரை விளங்குமணி மேலுலக கோபுரங்கள் ஐயம் இலே கின்றபுகழ் வையகத்து மன்னும்: மையல்விளே மாநரக கோபுரங்கள் கண்டிர் பொய்யுரையும் வேண்டா புறத்திடுமின் என்ருன். (சீவகசிந்தாமணி,2869) மெய்யால் புகழும் பொன்னுலக வாழ்வும் வரும்; பொய் யால் பழியும் நரகமுமே கிடைக்கும் என இது உணர்த்தியுளது. எவ்வழியும் இன்பநலங்களை அருளவல்ல மெய்யைக் கைவிட்டுப் பொய்யைப் பேசி மனிதன் புலேயாப் அழிவது கொலையாத துன்பமாய்த் தொடர்ந்து நிற்கிறது. இழிவான பழக்கங்களைப் பழகி வருபவர் ஈனமாயிழிந்தே போகின்ருர். "பொய்ம்மை மொழி புகன்றறியேம் புகலமன்ம் எண்ணுகினும் மெய்ம்மை அலது உரையாகா வேதம் நவில் பயிற்சியால்.” (நைடதம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/103&oldid=1326660" இலிருந்து மீள்விக்கப்பட்டது