பக்கம்:தரும தீபிகை 5.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தீ ைம 1643 ால்ல வழியில் பழகி வந்துள்ள நா பொல்லாத பொய்யைச் சொல்லாது என இது குறித்துள்ளது. பொய்யால் அல்லலே விளையும்; ஆன்மசக்தி அழிந்து இழிந்து போம். மெய்யால் எல்லா மகிமைகளும் உளவாம்; சக்தியவான் அதிசய ஆற்றலு டையய்ை எத்திசைகளிலும் இசைமிகப் பெறுகின்ருன். புகழும் புண்ணியமும் உடையதை இழந்து பழியும் பாவமும் கருவதைக் கழுவி இழிவது முழுமடைமையாயுள்ளது. பொய் பேசுவது பிழையான பேடித்தனமேயாம்.

    • Dare to be true, nothing can need a lie** [Herbert]

'உண்மையாகத் துணிந்து கில்; பொய் பேச வேண்டிய அவசியமே யில்லே' என ஜார்ஜ் ஹெர்பெர்ட் என்பவர் இவ்வாறுகூறியுள்ளார். “Truth is as impossible to be soiled by any outward touch as the sunbeam.” (Milton) 'உண்மையை எதுவும் பழுது படுத்த முடியாது; சூரிய கிரணம் போல் அது யாண்டும் ஒளி விசியுள்ளது.” என ஆங்கி லக் கவிஞராகிய மில்ட்டன் இங்கனம் குறித்திருக்கிருர். சக்தி .யத்தைக் கைப்பிடித்தவன் எத்தகைய இடர்களையும் வென்று நித்திய ஆற்றலுடன் நிலவி நிற்கிருன். வாயால் ஒரு பொய்யைச் சொல்லும்படி எவ்வளவோ கொடிய இடையூறுகளைச் செய்தும் சத்தியசீலனை அரிச்சந்தி ரன் யாதும் வழுவாமல் மெய்யையே பேணி மேன்மை மிகப் பெற்ருன். தேவதேவர்களும் அவன் முன் வந்து கின்று ஆவ லோடு புகழ்ந்து மகிழ்ந்தனர். இன்றும் அவனே உலகமெல்லாம் உவந்து போற்றி வருகின்றன. சாபாலி என்னும் பெரியவரிடம் ஒரு வாலிபன் படிக்க வந்தான். அவனது கிலைமையை அம்முனி வர் வினவினர். உள்ளதை யெல்லாம் அவன் ஒளியாமல் சொன் ன்ை. உன் தங்கை பெயர் என்ன? என்ருர். நான் யாருக்குப் பிறந்தேனே எனக்குத் தெரியாது; என் காயை மாத்திரம் தெரியும்’ என்ருன். அந்த வார்க்கையைக் கேட்டதும் அம்மா தவர் மனம் மிகமகிழ்க்தார். நீயே உத்தமமான சக்தியவான்; உனக்கு எல்லாக் கலைகளும் எளிதே தெளிவாம்; உன்னிடமிருக் தே அரிய தவசிகளும் பெரிய உண்மைகளை உணர்ந்து கொள்ளு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/104&oldid=1326661" இலிருந்து மீள்விக்கப்பட்டது