பக்கம்:தரும தீபிகை 5.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1654 தரும பிேகை புண்ணியபூமி என்று இக்க காடு முன்னம் புகழ் பெற்றிருந்தது. நீர் அறம் நன்று கிழல்கன்று தன்இல்லுள் பார்.அறம் கன்று பாத் துண்பானேல்-பேரறம் நன்று தளிசாலே நாட்டல் பெரும்போகம் ஒன்றுமாம் சால வுடன். (சிறுபஞ்சமூலம்,63) குடிக்க நீர் உதவி, இருக்க நிழல் தந்து, உண்ண உணவூட் டிப் பலவழிகளிலும் கருமங்களைச் செய்துவரின் அவை பேரின்ப போகமாய்ப் பெருகி வரும் எனக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிருர். சீரிய உண்மை நேரே தெரிய வந்தது. இனிய தருமத்தாலும் அரிய தவத்தாலும் சூரபன்மன் பெரிய i. பேறுகளைப் பெற்ருன். அண்டங்கள் பலவும் ஆள நேர்த்தான். முடிவில் செல்வக் களிப்பாலும் பல்வகைச் செருக்காலும் தீமை செய்ய மூண்டான். நல்லவர்களுக்கு அல்லல்களை விளைத்து வந்த மையால் புண்ணிய மூர்த்தியாகிய இறைவன் முருகன் ஆப் அவனே அழித்து ஒழிக்க வந்தான்."தீமையைக் கைவிட்டு கன் மையைக் கடைப்பிடித்து நட; இல்லையேல் அடியோடு அழிந்து போவாய்' என்று நீதிமுறை கூறி ஒரு தாதுவனே விடுத்தார். அத்துனது தன் வந்து ஒதியும் இத்தீகன் கேட்காமல் திங்கிலேயே ஒங்கி நின்றன். உடன் பிறந்த தம்பி சிங்கமுகனும் உறுதி கலம் கூறினன். அவனுடைய உணர்வுரைகள் அயலே வருகின்றன. பேதை வானவர் தங்களேச் சிறையிடைப் பிணித்தாய்! ஆதலால் உனக்கு ஆனதுஎன் துன்பமே அல்லால் ஏதும் ஒர்பயன் இல்லதோர் சிறுதொழில் இயற்றி வேதனேப்படு கின்றது மேலவர் கடனே? (1) குரவரைச்சிறு பாலரை மாதரைக் குறைதீர் விரதாற்ருெழில் பூண்டுளோர் தம்மை மேலவரை அருமறைத் தொழிலாளரை ஒஅறுத்தனர் அன்ருே கிரய முற்றவும் சென்று சென்று அலமரும் நெறியோர்.(2) = ----- அமரர் தம்பெருஞ் சிறையினே நீக்குதி ஆயின் குமர நாயகன் ஈண்டுபோர் ஆற்றிடக் குறியான் நமது குற்றமும் சிந்தையில் கொள்ளலன் நாளே இமைஒடுங்குமுன் கைலையில் மீண்டிடும் எந்தாய்! (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/115&oldid=1326672" இலிருந்து மீள்விக்கப்பட்டது