பக்கம்:தரும தீபிகை 5.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபதாவது அதிகாரம். பு லை. அஃதாவது ஊனே உண்னும் ஈனம். புலைப்புசிப்பு மிகவும் கொடிய தீமை, அதனை ஒழித்து ஒழுக வேண்டும் என உணர் த்துகின்றமையால் தீமையின் பின் இது இங்கு வைக்கப்பட்டது. 691. புலேயனெனும் சொல்லே புலால்புசிப்போன் என்னும், நிலையை எளிதுணர்த்தி கிற்கும்-தலையான சாதியேம் என்று தருக்குவாய் ஊனுண்டல் திேயோ சற்றே கின. (க) புலேயன் என்னும் சொல் புலால் புசிப்பவன் என்னும் நிலை மையை நேரே தெளிவாக உணர்த்தி நிற்கின்றது; உயர்ந்த சாதி என்று உள்ளம் கருக்கியுள்ள நீ இழிந்த ஊனை விழைந்து உண் னலாமா? இதனைச் சிறிது நினைந்து பார்! என்பதாம். உணவை ஒர்ந்து கொள்ளும்படி இது உணர்த்துகின்றது. உண்னும் உணவால் மனிதன் உயிர் வாழ்ந்து வருகின்ருன். அந்த உணவின் நிலைமைக்குத் தக்கபடியே குணமும் செயலும் அவனிடம் மருவி வருகின்றன. மனிதன் எதையும் ஆராய்ந்து அறிய வுரியவன்; நல்லது தீயதை நாடித் தெரிபவன். ைேமயை நீக்கி நன்மையைத் தழுவி ஒழுகிவரும் அளவு அவன் விழுமியோனுய் விளங்கி வருகிருன். ஒழுக்கமும் விழுப்பமும் உரிமை கோப்ந்துள்ளன. தனது சொல்லும் செயலும் பழக்க வழக்கங்களும் இழுக் கம் படியாமல் இகமும் இனிமையும் கோய்ந்து வரின் அவன் பெரிய மனிதனுப் வாய்ந்து அரிய மேன்மைகளை அடைந்து கொள்ளுகிருன். காரண காரியங்கள் கருதி யுணர வுரியன. உள்ளே கொள்ளும் உணவு நல்லதாயிருத்தல் வேண்டும். சுத்தமான உணவுகள் சத்துவ சீலங்களை வளர்த்த வருதலால் அவை உத்தமங்களாய் மதிக்கப் பட்டுள்ளன. அருந்தி வரும் உணவின்படியே மனிதன் யாண்டும் பொருந்தி வருகின்ான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/117&oldid=1326674" இலிருந்து மீள்விக்கப்பட்டது