பக்கம்:தரும தீபிகை 5.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு லை o 1657 “As a man eats, so shall he become.” o 'ஒரு மனிதன் உண்டுவரும் உணவு எப்படியோ அப்படி யே உருவாகி வருகிருன்' என்னும் இது ஈண்டு உணர வுரியது. புலால் உயிர்க் கொலையால் வருவது ஆதலால் அதனை உண் இணுவது பழி ப்ாவம் என வந்தது. ஆடு மாடு கோழி பன்றி பற வை முதலிய பிராணிகளைக் கொன்று அவற்றின் தசைகளைத் தின்று வருவது கொடிய வசைகளாய் கின்றது. ஊன்,தசை, விடக்கு,கிணம், புலால் என்னும் பெயர்களால் அவற்றின் புலே நிலை புலனும். உற்ற நாமங்கள் ஊனங்களை விளக்கியுள்ளன. புலையன், புலைச்சி என்னும் பெயர்கள் இழிந்த கீழ்மக்களைக் குறித்து வருகின்றன. புலாலை நிலையாக உண்பவன் புலையன் என நேர்ந்தான். சண்டாளர், நீசர், புலையர் என்னும் மொழிகள் இழிந்த பழிச் செயல்களால் விளைந்து வந்துள்ளன. புலைப் புசிப்பு கொலைத் தொழிலோடு தொடர்ந்திருத்தலால் புலால் உண்டலே மேலோர் இகழ்ந்து வெறுத்துள்ளனர். தீய மருளான உணவு தாய அருளாளர் உள்ளங்களைத் துடிக்கச் செய்திருத்தலால் அதனை அவர் கடுத்து வெறுத்திருக்கின்றனர். தன்ஊன் பெருக்கற்குத் தான் பிறி துரன் உண்பான் எங்கனம் ஆளும் அருள்? (குறள், 251) தன் உடம்பைப் பெரிகா வளர்த்தற்குப் பிற உயிர்களைக் கொன்று அந்த உடம்புகளைத் தின்பவன் அருளற்ற மருளனப் இழிகின்ருன் எனத் தேவர் இங்கனம் இரங்கியிருக்கிரு.ர். சீவ வதையால் வரும் பாவஊனைச் சீவதயாபரர் பரிந்து இகழ்ந்திருப் பது அறிந்து ஆராய்ந்து தெளிந்து கொள்ள வுரியது. உயர்ந்த சாதியார் என்று தங்களை நினைந்திருப்பவரும் புலாலே அருந்தி வருகின்றனர். அவரைப் புலையர் என்று சொன் ல்ை பொறுக்க மாட்டார்; வெறுத்து வைவர். உண்டு பழகிய தை விட முடியாமல் ஊனமாய் உழலுகின்றனர். 'புலேயர் என்று சொன்னல் புலப்பர்: புலையை கிலேயறியா துண்பர் கிதம்.” (அரும்பொருளமுதம்) அவர் நிலை இவ்வாறு புலை படிக் துள்ளது. 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/118&oldid=1326675" இலிருந்து மீள்விக்கப்பட்டது