பக்கம்:தரும தீபிகை 5.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு இல 1659 என்றது உயர்ந்த சாதியேம் என்று தருக்கியுள்ளவர் ஊன்றியுணர்ந்து உண்மையை ஒர்ந்து கொள்ள வந்தது. அநீதி யால் வருகிற பாவ ஊனே ஆவலோடு அருக்தி வருவது பெரிய கேவலம். அவகேடான இதனை ஒழித்து மனிதன் புனித நிலையில் ஒழுக வேண்டும். உணவின் தாய்மை உயர்ந்த மேன்மையாம்.

  • =======

692. கொலையை வளர்த்துக் கொடுமை விளேத்து நிலையை மிகவிழித்து கிற்கும்-புலேயை உண்டு களிப்போர் உறுபழி பாவங்கள் கண்டு தெளியாரோ காண். (a-) இ-ள் கொலையும் கொடுமையும் படிந்து மனிதனது தலைமையான நிலைமையை இழித்துக் கெடுத்து வருகிற புலாலே உண்டு களிப் பவர் அகளுல் நேரும் பழி பாவங்களைக் கண்டு தெளியவில்லையே; கருதித் தெளிந்து உறுதியை உணர்ந்து கொள்ள வேண்டும். இது புலை உணவு கொலை விளைவு என்கின்றது. மனிதனது உயர்ந்த அறிவுக்குப் பயன் எவ் வுயிர்க்கும் இரங்கி அன்பு செய்தலேயாம். இந்தப் பண்பாடு வளர்ந்துவரும் அளவு அவன் சிறந்த மேன்மையாளய்ை விளங்கி வருகிருன். பிறவுயிர்களைக் தன் உயிர்போல் பேணி வருபவனிடம் தரும திேகள் யாவும் காணியாய் வந்து கனிந்திருக்கின்றன. அருள் கிலை அதிசய மகிமைகளை அருளி வருகின்றது. தன் உயிர் வாழ்க்கை எவ்வழியும் இகம் படிந்து வர ஒழுகி வருபவன் திவ்விய கதிகளை அடைந்து கொள்ளுகிருன். கொடு மைபடியின் அந்த மனித வாழ்வு கடுமையான அவகேடாய் முடிகின்றது. வினையின் விளைவுகள் விழைந்து சிந்திக்க வுரியன. ஊனே உண்பதில் எவ்வளவு கொடுமை ஊடுருவியுள்ளது! நேரே கொலையைச் செய்யாவிடினும் புலால் உண்பவனிடம் கொலைப் பாவம் வந்து குடிபுகுந்து கொள்ளுகின்றது. ஆகவே அவன் பாவியாய் நரக துன்பத்தை அடைய கேர்கின்ருன்.

உண்ணுமை யுள்ளது உயிர்நிலை ஊன் உண்ண

அண்ணுத்தல் செய்யாது அளஅறு.” (குறள், 355)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/120&oldid=1326677" இலிருந்து மீள்விக்கப்பட்டது