பக்கம்:தரும தீபிகை 5.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1660 த ரும தி பி கை மனிதன் ஊனே உண்ணவில்லையானல் ஆடு கோழி முதலிய பிராணிகள் சுகமாப் வாழும். அவன் உண்னுவதால் அவை மாய்ந்து படுகின்றன; வாயில்லாத அங்கப் பிராணிகள் துடித்துச் சாகும் படி செய்வதனால் புலால் உண்டவன் நரக துன்பத்தில் ஆழ்ந்து நாசமாய்ப் போகின்ருன் என இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து நோக்க வேண்டும். உண்ட நரகம் மீள அவனை ஒரு போதும் வெளியே உமிழாது என்பார் அளறு அண் னத்தல் செய்யாது என்ருர். நீ ஊனை விழுங்கின் உன்னை நரகம் விழுங்கிக் கொள்ளும். அங்க நரக வேதனையிலிருந்து பின்பு நீ மீள முடியாது ஆதலால் ஊனே உண்ணுமல் உன் உயிர்க்கு உறுதி காடி உப்தி பெறுக எனத் தேவர் பரிவோடு இதில் உணர்த்தியுள்ளார். உண்மையை ஒர்ந்து நன்மையில் சேர்ந்து கொள்ளுக. உடம்பை வளர்க்க உண்பதில் உயிரைப் பாழாக்கி விடுவது எவ்வளவு மடமை! எத்துணை மையல் எத்தனை துயரம் இதனை உய்த்துணர்க. கறி தின்றவனே எரிவாய் நரகம் எரிந்து கின்று கொலைக்கும் என்றது.அவனது பாவத்திமையை நன்று தெரிந்து கொள்ள வங் தது. பிறஉயிரைவதைத்துஉண்டவன்கன் உயிர்பதைக்க நின்ருன். மறிப்பல கொன்றும் மடப்பினே விழ்த்தும் கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை உஆறுப்பு உறுப்பாக அரிந்து அரிந்து ஊட்டி. ஒறுப்பர் சிலரை அவரும் ஒருபால். (சூளாமணி) இங்கே ஆட்டின் கறியைக் கின்றவரை நரகத்தில் கொண்டு போப் ஆழ்த்தி அங்கே அவர்கம் உறுப்புகளை அறுத்து அறுத்து ஊட்டி யமபடர்கள் அவரைச் சித்திரவதை செய்வர் என இது உரைத்துள்ளது. புலால் புசிப்பதில் பல உயிர்கள் கொலையுறுகின்றன; அந்தக் கொலைப் பாவத்தால் கன் உயிர் இன்னவாறு கொடிய கரக துயரங்களை அடைய நேர்கிறது. துக்கத்துள் தாங்கித் துறவின்கண் சேர்கலா மக்கட் பிணத்த சுடுகாடு-தொக்க விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலங்கெட்ட புல்லறி வாளர் வயிறு. (நாலடியார், 121)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/121&oldid=1326678" இலிருந்து மீள்விக்கப்பட்டது