பக்கம்:தரும தீபிகை 5.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. பு லை 1661 செத்த சவங்களை மருவியிருக்கும் சுடுகாடு போல் பறவை மிருகங்களுக்குப் புலால் உண்பவர் வயிறே சுடுகாடாயுள்ளது என இது குறித்திருக்கிறது. இதனைப் பாடியவர் ஒரு சமண முனிவர். கொல்லா விர கமுடையவர் ஆதலால் புலைப் புசிப்பின் பொல்லாமையை இங்ங்னம் கொதித்துச் சொல்லினர். ஊன் உண்பவர் அறிவு கெட்ட மடையர் என வயிறு எறிந்து அவர் திட்டியிருப்பதை இதில் உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம். பிற உயிர்கள் அழிந்து படுகிற துயரத்தையும், அதனல் தன் உயிர்க்கு வரும் நாக தன்பத்தையும் சிந்தித்து உணராமல் ஊனே உண்டு மான மனிதர் ஈனமடைகின் ருரே! என்ற இரக்கத் தில்ை இப்படி அவர் கடுமையாய் கிந்தித்து மொழிந்துள்ளார். மனித சமுதாயம் புனிதப ாய் உயர்ந்து மேன்மை அடைய வேண்டும் என்று கவிஞர் ஆர்வத்தோடு கருதி வருபவர் ஆக லால் இழி நிலைகளை வெறுத்து உரிமையோடு அவர் ஊக்கி உணர் த்த நேர்கின்ருர். உணர்வுநிலை உலக நலத்தைக் கருதியுளது. அண்பை யில் காலம் சென்ற பெர்நாட்ஷா (Bernad Shaw) என்னும் ஆங்கிலக் கவிஞரை ச் சுவிர் லேந்து அறிஞர் ஒருவர் சக்தித்தார். கலை நிலைகளைப் பற்றிப் பேச்சுகள் நிகழ்ந்தன. பேசி வருங்கால் இந்த உலகத்தில் "மூடர்கள் யார்?' என்று அவர் கேட்டார். எனது நூல்களைப் படியா கவர் எல்லாரும் மூடர்க ளே' என்று கவிஞர் பதில் கூறினர். பாரிடமும் வினேதமாக வும் விநயத் துடுக்காகவும் பேசுபவர் ஆகலால் எதையும் நேரே திரமாய்க் கூறி விடுவர். மனிதர்களுடைய பிழைவழிகளை மிகவும் கண்டிப்பவர். பிறருடைய இதநலங்களை ஒரு சிறிதும் கருதாமல் எவ்வழியும் சுயநலமே கருதி யாண்டும் தமக்கு ஊதியங்களையே நாடி உழல்பவர் கொடிய பாதகர் எனப் பெரிய சபையில் ஒரு முறை அவர் கூறினர். அந்த வாசகம் அயலே வருகிறது. “A scoundrel is a person who pursues his or her own personal gratification without regard to the feelings and interests of others.” (Bernad Shaw) :பிறருடைய விருப்பங்களையும் உணர்ச்சிகளையும் கவனியா மல் தனது சொக்கச் சுகத்தையே நாடுகின்றவன் கொடிய நீசன்' என இங்ங்னம் அவர் கூறியிருக்கின்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/122&oldid=1326679" இலிருந்து மீள்விக்கப்பட்டது