பக்கம்:தரும தீபிகை 5.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1662 த ரும தி பி கை அயல் உயிர்கள் துயருறப் புலப்புசிப்பு பொருந்தியிருப்பது அறிந்து கொள்ள வுரியது. ஆங்கில காட்டில் பிறந்தும் அவர் புலாலை உண்ணுமல் புனித வாழ்வை கடத்தி மனித சமுதாயத் துக்கு இனிமை காட்டியிருக்கிருர். பிற பிராணிகளைத் துடிக்கக் கொன்று அவற்றின் உடல்களைச் சுவை செய்து புசித்துத் தம் உடல்களை வளர்த்து வருவது கொடிய நீசம் ஆதலால் அது படு பாதகம் எனக் கடிய நேர்ந்தது. "கொன்று உயிருண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம் கின்று இவ்வுலகில் கடிவான் நேமிப்பிரான்தமர்போந்தார்.', (திருவாய்மொழி) ஊன் உண்போர் பகை தீ போல் பாபசாதி என நம்மாழ் வார் இதில் குறித்திருக்கிருர். பிராணிகளின் உடல்களையே தின்று வந்தாலும் அந்த உயிர்களைப் பாழ்படுத்தி வருதலால் உயிர் உண்ணும் என அவரது ஊட்டங்களை இன்னவாறு காட்டியருளி ர்ை. இப்படி உயிர்க் கொலை உறைந்திருத்தலால் ஊன் உணவு பாவம் என உயர்ந்தார் யாவரும் இரங்கி உணர்த்தியுள்ளனர். “பலஉடம்பு அழிக்கும் பழிபூண் உணவினர் தவம்எனத் தேய்ந்தது துடிஎனும் அதுசுப்பே.” (கல்லாடம்) ஊன் உண்போர் தவம் தேய்ந்தது போல் ஒரு பெண்ணின் இடை தேய்ந்தது எனக் கல்லாடர் இங்கனம் உரைத்திருக்கிரு.ர். புலாலைப் பழியூண் என்று குறித்திருக்கலை விழியூன்றி நோக்குக. நோன்பு என்பதுவே கொன்று தின்னமை.” என்ருர் ஒளவையார். புலால் உண்ணுமையே தவமாம்என இதில் குறித்திருக்கலைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். "கொன்று ஊன் நுகரும் கொடுமையை உள்கினேந்து அன்றே ஒழிய விடுவானேல்--என்றும் இடுக்கண் என உண்டோ? இல் வாழ்க்கை யுள்ளே படுத்தானும் தன்னேத் தவம்.” (அறநெறிச்சாரம்,62) ஊன் அருந்துதல் தீமை என்று உணர்ந்து அதனை ஒழித்த விடுவா னேல் அவன் அரிய தவமுடையனப்ப் பெரிய இன்ப கலங்களே அடைவான் என முனைப்பாடியார் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். உற்றுயிர் ஒம்பித் இந்தேன். ஊனெடு துறப்பின் யார்க்கும் மற்றுரை இல்லை மண்ணும் விண்ணும் நும்.அடிய அன்றே" (சீவகசிந்தாமணி,2927) ". . . . ■。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/123&oldid=1326680" இலிருந்து மீள்விக்கப்பட்டது