பக்கம்:தரும தீபிகை 5.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1674 த ரும தி பி கை கீ என்ன கதி அடைவாய்? இதனை உன்னி உணர்க. - இனங்களோடு கூடிவாழும் இயல்பு மனிதனிடம் இயல் பாப் அமைந்திருக்கிறது. தாய் தங்தை மனைவி மக்கள்பால் உரிமையும் அன்பும் மருவிப் பிரியம் பெருகிப் பேணிவருகிருன். பிள்ளைப்பாசம் எல்லாருடைய உள்ளங்களிலும்உறைந்துள்ளது. 'கடந்துளோர்களும் கடப்பரோ மக்கள்மேல் காதல்’ என்றத ல்ை புத்திர வாஞ்சையின் உயர் கிலையை நன்கு உய்த்துணர்ந்து கொள்ளலாம். மகவின் பிரியம் மிகவும் பெரியது. - பெற்ற பிள்ளையிடம் இவ்வாறு பேரன்பும் பிரியமும்பெருகி வருகிற மனிதன் குஞ்சுகள் அயலே அலறித்துடிக்க அவற்றின் தாய்க்கோழிகளைப் பற்றிப் பி டி த் து ப் பதைக்கப் பதைக்க வதைக்கிருன். காய் அலம் இளங்குஞ்சுகளைக் கொல்லுகிருன்; இந்தப் பொல்லாத புலைநிலை புலால் உண்ணும் பழக்கத்தால் அவ னிடம் புகுந்துள்ளது. கொடுமையும் தீமையும் நெடுமையாய்ப் பழகிவரவே இரக்கமும் கயையும் அவன் நெஞ்சில் இல்லாமல் போயின. இனிய அருளை இழந்து கொடியமருளில் இழிந்துசெடிய பாவியாப் கிமிர்ந்து திரிவது நீசங்களையே பயங்துவருகிறது. தன் பிள்ளையை அயலார் சி றி து வைதாலும் பெரிதும் உள்ளம் துடிக்கின்ற மனிதன் குஞ்சுகள் அலறக் கோழிகளைக் கொன்று தின்பது அறிவும் பரிவும் அடியோடு குடிபோன படியாம். பழகிய இழிசுவை மனிதனைப் பாழாக்கியுளது. 'அருள் ஆட்சி ஊன்தின்பவர்க்கு இல்லே' (குறள், 252) என்றகளுல் அவர் உள்ள நிலை உணரலாகும். ஊன் உண்டு உயிர்கட்கு அருளுடையேம் என்பானும், தானுடம்பா டின்றி வினேயாக்கும் என்பானும், காமுறும் வேள்வியில் கொல் வானும் இம்மூவர் தாம்அறிவர் தாங்கண்ட வாஅ.” (திரிகடுகம், 56) ஊனே உ ண் ப வ ர் அருளுடையேம் என்.று சொல்வது அறிஞர் இகழ்ந்து சிரித்தற்கு இடமாய் கின்றது என இது குறித்திருக்கிறது. புலைப்புசிப்பு அருள்கெட்ட கொலேப்பழி யாம்; ஆகவே அதனை ஒழித்த பொழுதுதான் அருளை வளர்த்த படியாம். அருள் வர அவல மருள்கள் ஒழிக் து போகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/135&oldid=1326692" இலிருந்து மீள்விக்கப்பட்டது