பக்கம்:தரும தீபிகை 5.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1682 த ரும தீ பி. கை கூழ், கூலம், பண்டம் என்பன உணவுக் கானியங்களைக் குறித்து வருவது ஊன்றி உணரவுரியது. மனிதனுடைய பசியை நீக்கி வாழ்வை எவ்வழியும் வளம்படுத்தி வருதலால் யாவரும் இவற்றை ஆவலோடு விளேத்து யாண்டும் போற்றிவர லாயினர். பயிர் வகைகள் உயிர் வகைகளுக்கு உணவுகளை ஊட்டிவருவது இனிய காட்சிகளாப் எங்கும் நீண்டு நிலவி வருகிறது. கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் பொழிலின் உள்ள முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள்புறவின் உள்ள பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள மதுவன மலரில் கொள்ளும்வண்டுஎன மள்ளர் கொள்வார். (1) முந்துமுக் கனியின் கான முதிரையின் முழுத்த நெய்யில் செந்தயிர்க் கண்டம் கண்டம் இடையிடை செறிந்த சோற்றில் தங்தமில் இருந்து தாமும் விருக்தொடும் கமரி ைேடும் - அந்தணர் அமுதர் உண்டி அயில்வுறும் அமலைத்து எங்கும். (2) (இராமாயணம், நாட்டுப்படலம்) I. வயல் பொழில் முதலிய இடங்களிலிருந்து நெல் முதலிய பண்டங்களைத் தொகுத்துச் சேர்க்க முறைகளையும், நெய் பால் தயிர் கனிகளோடு உணவுகளை உண்டுவந்த நிலைகளையும் இவை உணர்த்தியுள்ளன. இங்காட்டில் பண்டிருந்த விளைவின் பெருக் கையும், உணவின் தரத்தையும் கண்டு மகிழ்ந்து இந்நாள் நிலை மையை எண்ணிக் கண்ணிர் மல்கி இங்கே ஏங்கி நிற்கின்ருேம். நமது முன்னேர்களது சீவியநிலைகளைக் காவியங்கள் காட்டி வருகின்றன. அக்காட்சிகள் பழங்கால மாட்சிகளையும் வளங் களையும் விளக்கி நமக்கு மகிழ்ச்சிகளை ஊட்டி வருகின்றன. ஆதியில் மனிதன் பசியைக் தீர்க்கக் கனிகாப் கிழங்குகளை உண்டுவந்தான். பின்பு உண்ணுவகைச் சமைத்தத் தின்னக் தொடங்கின்ை. அதன்பின் அ ரி சி, புல் முதலியவற்றைப் பக்குவம் செய்து உண்டுவர நேர்த்தான். நாளடைவில் உணவு வகைகள் பெருகி வரலாயின. சு. ைவ க ளி ன் உணர்வுகளில் மனிதர் சுகிகளாய் உயர்ந்து சுகித்து வருகின்றனர். காலதேசங்களின் மாறுபா டுகளுக்குக் தக்கபடி உணவுகள் வேறுபட்டிருக்கின்றன. கடல் ஒரங்களில் வாழ்பவர் மீன்களைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/143&oldid=1326700" இலிருந்து மீள்விக்கப்பட்டது