பக்கம்:தரும தீபிகை 5.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ர வு 1555 தில் உள்ள கரவு வஞ்சனைகளை மறைக்கப் புறத்தில்கல்லவர்போல் நடிக்க நேர்கின்றனர். கடிப்பு ஒரு படிப்பாய்ப் படிந்துள்ளது. உள்ளத்தில் கள்ளம் படிந்த பொழுது அந்த மனிதன் எள் ளல் இழிவுகளில் பழகிவருகிருன்;வரவே இழிந்தவனுய்க் கழிந்து போகிருன்; போகவே ஈனங்களையாண்டும் துணிந்துசெய்கிருன். கள்ளன் திருடன் வஞ்சகன் பொய்யன் என்று சொன் ல்ை எந்த மனிதனும் சிங்தை நோகின்ருன். அவ்வாறு நோகின் றவன் அந்த இழி பழக்கங்களை விடாமல் தழுவி உழலுகிருன். மாறுபாடான இழிசெயல்களால் சீரழிவு நேர்வதை அறிந்தும் திருந்தி உயராமல் அழிந்து போவது அவலவாழ்வாய் முடிக் துள்ளது. அகம் பழுதுபடவே யாவும் பாழ்படுகின்றன. மனச்செம்மை எவ்வழியும் நன்மையாம். மனக்கோட்டம் யாண்டும் தீமையாம். "மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில் வேறு வினேவேறு பட்டவர்பால் மேவும்--அனமே மனம்ஒன்று சொல்ஒன்று வான்பொருளும் ஒன்றே கனம் ஒன்று மேலவர்தம் கண்.” (நீதிவெண்பர'75) கீழோர் புலையையும் மேலோர் நிலையையும் இது விளக்கி யுள்ளது. சொல்லும் செயலும் மாறுபட்டுப் புல்லர் புலையாடித் திரிதலால் அவர் இழி நிலையாளராய்ப் பழிபட நேர்ந்தனர். கரவு வஞ்சனைகளால் உள்ளம் பாழ்பட்டவர் எவ்வழியும் அல்லல்களையே புரிவர் ஆதலால் அவரை அணுகவிடின் அவகே டேயாம். இழிவு நெருங்கின் அழிவு நெருங்கும் என்க. வஞ்சர் அல்லல் உறச் செய்வர். என்றது நெஞ்சு பாழான அவரை செருங்காமல் மருங் கோடு ஒழுகவேண்டும் என உணர்த்தி நின்றது. தியசேர்க்கை யால் தீமையே விளையும் ஆதலால் சேமமாப் வாழ விரும்பினவர் தீயவரை யாதும் யாண்டும் சேரலாகாது. 'கல்லிணக்கம் அல்லது அல்லற்படுத்தும்.” என ஒளவையார் இவ்வாறு அருளியுள்ளார். கெட்டசக வாசம் குட்டகோயினும் கொடியது. பொல்லாத புல்லரை அணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/16&oldid=1326573" இலிருந்து மீள்விக்கப்பட்டது