பக்கம்:தரும தீபிகை 5.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1554 தரும தீபிகை தன் செல்வாலங்களை இழந்து அல்லல் உழந்து மதுரையை அடைந்து மனைவியின் கால் சிலம்பை விலைப்படுத்த விழைந்து விதியிடையே சென்ருன். கனகன் என்னும் கட்டான் ஒருவன் கண்டான். அங்தச் சிலம்பை நல்ல விலைக்கு விற்றுத்தருவதாக நயமொழிபுகன்ருன். பொன்னகை செய்வோன் பொய் நகை செப்து இன்னுரையாடவே கோவலன்.அவனே நம்பினன். தனது அரிய அணியை அவனிடம் கொடுத்தான். அதனை வாங்கிக் கொண்டு போன அவ்வஞ்சன் அரசனிடம் போய்க் கோள் மூட்டினன்; அகனல் கோவலன் கொலேயுண்டு மாண்டான். பின்பு உண்மை தெளிந்து அரசனும் உயிர்பதைத்து இறந்தான். அவலங்கள் பல விளைந்தன. ஒருவஞ்சகன் செய்த தீமையால் நாடும் நகரமும் பாடழிந்து பரிந்து கொக்கன. நெஞ்சில் வஞ்சனையுடையவர் எவ்வளவு கொடியவர் அவ ரால் நாட்டுக்கு எவ்வளவு கேடுகள்! என்பதனே அந்த வஞ்சகக் கொல்லனுல் உலகம் நேரே உணர்ந்து கெடிது வருந்தியது. அஞ்சி அகல்க. என்றது வஞ்சனையாளரோடு பழகலாகாது; பழகினல் அழிவும் அல்லல்களும் விளையும் ஆதலால் அஞ்சி ஒதுங்குவது ஈலமாம், ஆகவே வஞ்சனையைக் கடப்பதற்கு அது ஒரு வழி யாப் வந்தது. வஞ்சகனை நஞ்சகமுடைய கொடிய பாம்பாகக் கருதி ஒழுகவேண்டும் என்பது கருத்து. 5ே6. அன்பன் அடியன் அருகமைந்தேன் ஆதிமுதல் இன்பமுறு கண்பின் இருங்குடியேன்.-என்பனபோல் வல்லபல சொல்லுவார் வஞ்சர் மருவினுல் அல்லலுறச் செய்வார் அறி. (சு) இ-ள் வஞ்சநெஞ்சர் உரிய அன்பர் போல் உறவாடுவர்; எளிய எவலர்போல் இகம்புரிவர்; பிரிய நண்பர் போல் இனிது பேசு வர்; இன்னவாறு பலவகையிலும் நன்னயம் காட்டுவர்; நம்பித் தழுவினல் அழிகேடுகளைச் செய்து நழுவி விடுவர் என்க. மனம் நேர்மையாயிருப்பின் அங்கே நல்ல நீர்மைகள் நிலவு கின்றன; அது மாறுபடின் வேறுபாடுகள் விரிகின்றன. அகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/15&oldid=1326572" இலிருந்து மீள்விக்கப்பட்டது