பக்கம்:தரும தீபிகை 5.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க்ர வ! lă53 நெஞ்சில் வஞ்சனே இல்லாதவர்க்கு எல்லாச் செல்வங்களை யும் திருமகள் உள்ளம் உவந்து அள்ளிக் கொடுப்பாள் என ஒளவையார் இவ்வாறு அருளி யிருக்கிருர். வஞ்சம் ஒன்று இல்லையானல் எல்லாப் பாக்கியங்களும் அவனைத் தஞ்சமாக வந்து அடையும் என்பதை இதல்ை அறிந்து கொள்ளுகிருேம். கள்ளம் ஒழிந்த பொழுது அந்த உள்ளம் புனிதமாய் உயர் கிறது; உயரவே உயர்ந்த தெய்வங்கள் உரிமையாய் உவந்து உதவிகள் புரிகின்றன. புரியவே அரிய பேறுகள் வருகின்றன. உள்ளத்தில் கள்ளம் ஒழியின் உயரின்ப வெள்ளத்தில் கின்ருன் அவன். இதனை நீ உள்ளத்தில் வைத்து ஒழுகி உயர்க, 655. வஞ்சம் உளம்வைத்து வாயினிக்கப் பேசுவார் தஞ்சம் எனவரினும் சாரற்க-நஞ்செனவே அஞ்சி அகல்க அகலாயேல் அல்லலெல்லாம் மிஞ்சி எழும்பின் மிடைந்து. (டு) இ-ள். நெஞ்சில் வஞ்சனேயுடையவர் நேரே இனியவார்த்தைகளைப் பேசி அன்பு காட்டிவரினும் அவரை அனுகாதே; நஞ்சம் என் அறு அஞ்சி விலகிவிடுக; விலகாயேல் அல்லல் பல அடைந்து அல மரலுறுவாய், உள்ளதை உணர்ந்து உறுதி செய்து கொள்ளுக. உருவத்தில் மனிதன் ஆயினும் உள்ளம் யேகேல் அவன் கொடிய மிருகத்தினும் கடியபாம்பினும் கொடியவனவன். புலி கரடி பாம்பு முதலியன எவ்வளவு கொடியன ஆயினும் கேடு களை எண்ணி ஆராய்ந்து குறிகப்பாமல் செய்யும் ஆற்றல் அவற் றினிடம் இல்லை. விஞ்சநெஞ்சன் நாசவேலைகளை நன்கு சூழ்ந்து நாடிகின்று எவ்வழியும் கப்பாதபடி செப்துவிடுவன் ஆதலால் அந்த நீசன் மிகவும் அஞ்சத்தக்கவன் என்க. த் உள்ளத்தில் வஞ்சனேயுடையவர் உரை செயல்களில் அன் பும் பணிவுமுடையவர் போல் நன்கு நடிப்பர் ஆதலால் அந்த வஞ்சநிலைகளை நம்பலாகாது; நம்பினுல் நாசம் நேர்ந்து விடும். கோவலன் மிகவும் நல்லவன்; பெருந்தன்மை யுடையவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/14&oldid=1326571" இலிருந்து மீள்விக்கப்பட்டது