பக்கம்:தரும தீபிகை 5.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1708 த ரும தீபிகை விதவைகளையும் அைைதயான எழைகளையும் வஞ்சித்துப் பணத்துக்காகக் கொடிய தீமைகளைச் செய்கிறவன் ஊன் உண்ணுதவனுயினும் தீய காட்டுமிருகத்தினும் அவன் கொடிய தியனே' என்னும் இது இங்கே கூர்ந்து ஒர்ந்துகொள்ளவுரியது. புலால் புசியாமை ஒன்றைக்கொண்டே குலாலம் கொண் டாடுவது பிழை; சீவகருணை கோய்ந்து யாவருக்கும் இகமாய் எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டு எவ்வழியும் செவ்வியனப் ஒழுகும் ஒழுக்கத்தாலேயேமனிதனுக்கு விழுப்பங்கள் உளவாம். :இகழ்தலின் கோறல் இனிதே' (நாலடி, 219) என்றகளுல் கொடுஞ்சொல்லின் கொலேத்தீமை நன்கு புலம்ை. கன் வாயிலிருந்து வெளிவரும் சொல் எவ்வழியும் ட ட' னுடையதாய்ச் செவ்விய இனிமை தோய்ந்து வரவேண்டும். பிறர் உள்ளம் நோகும்படி பேசின் அதுவும் ஒரு வகையில் கொலையாம். பழிமொழிகளால் உயிர் அழிதுயர்களை அடையும் ஆதலால் பொல்லாத சொல்லை யாண்டும் சொல்லலாகாது. கொல்லாமல் சொல்லாலே கொல்லும் கொடியரே பொல்லாக் கொலைஞர் புலே." இந்நிலையை உணர்ந்து நெஞ்சம் தெளிந்து யாண்டும் எவ ரிடமும் இனிய நீர்மையோடு பேசி அரிய சீர்மைகளைப்பெறுக.

705 இன்பம் உறவிழைந்து எல்லா உயிர்களுமே புன்பாடு நீடிப் புரிகின்ற-துன்பம்ே எத்துணையும் எவ்வுயிர்க்கும் என்றுமே செய்யற்க ஒத்துதவி செய்க வுணர்ந்து. (டு) இ-ள். தாம் நல்ல இன்பங்களை அடையவேண்டும் என்றே எல்லா உயிர்களும் ஆவலோடு யாண்டும் முயன்று வருகின்றன; அத் தகைய நிலையிலுள்ள சீவர்களிடம் யாதொரு துன்பமும் எத் துணையும் செய்யலாகாது; எவ்வழியும் ஒத்து உதவிசெய்வதே உத்தமம்; அவ்வாறே என்றும் செய்துவருக என்பதாம். சீவர்களுடைய வாழ்வுகளில் அவலக் கவலைகளே தொடர்க் திருக்கின்றன. பசித்துயர் முதலியன இயல்பாகவே பற்றியிருத் தலால் அவற்றை நீக்கி வாழவேண்டிய பொறுப்பு நீண்டு நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/169&oldid=1326726" இலிருந்து மீள்விக்கப்பட்டது