பக்கம்:தரும தீபிகை 5.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க 2ல 1707 வரும். சிறிது மருவிய பரம்பரை வழக்கத்தைப் பெரிதுபடுத்திப் பேசி உயர்வு காண முயல்வது இழிவான மடமையாம். "ஊன் அருந்தோம் எம்போல் உயர்நிலையார் இல்லைஎன்று வான்.அகந்தை கொண்டு வழிகின்றீர்-ஊனே வழுக்கியுமே தீண்டாத வன்கழுதைக்கு என் சீர்? ஒழுக்கினல் ஆங்காண் உயர்வு." கழுதை பரம்பரையாது என்றும் ஊன் தின்னது; அதனல் அதற்குப் பெருமையா? இனிய குண நீர்மைகள் கிறைந்து எவ் வழியும் செவ்வியராய் ஒழுகிவரும் நல்ல ஒழுக்கத்தாலேயே உயர்வு உண்டாம்; இவ்வுண்மையை ஊன்றி உணர்ந்துகொள்ள வேண்டும். இதமான நீர்மைகள் உயர்வாய் ஒளி புரிகின்றன. பழகிய பழக்கத்தால் ஊனே உண்டு வருபவர் பலர் அதனை உண்ணுகவரினும் உயர்ந்த குணநலங்கள் அமைந்து யாண்டும் இதம்புரிந்து சிறந்த மேன்மையாளராய் விளங்கியுள்ளனர். ஊன் உண்ணுேம் என்று உயர்வு காட்டிப் பிலுக்கியுள்ள வர் பலர் ஈனத் தீமைகளைத் துணிந்து செய்து ஈனர்களாகவே கழிந்து பழியும் பாவமும் படிந்து பாழாய் ஒழிந்துபோகின்றனர். ஆகவே ஊன் புசியாமையால் மாத்திரம் உயர்வு அமையாது. ' “The cow does not eat meat, nor does the sheep. Are the great non-injures.?”" * 'மாடுகள் மாமிசம் புசியா; ஆடுகள் அதைத் தின்ன; அதல்ை அவை சீவகாருணியமுடையனவா?” என்று விவேகா னந்தர் இவ்வாறு அதிவிநயமாய் மதிதெளிய வினவியிருக்கிரு.ர். இயற்கையாகப் புலால் உண்ணுமை ஒன்றைக்கொண்டு எவனும் பெருமை பேசலாகாது. அவ்வாறு பேசுவது அறிவின மான அவலமாம். புலால் புசியாக சைவர் என்று தம்மைப் பெருமையாகப் பிதற்றித் திரிபவர் வஞ்சனை சூதுகளை நெஞ்சம் துணிக்து செய்து மனிதர்களிடையே கொடிய கொலை பாதகங் களை விளைவித்து வருகின்றனர் என அவர் வெறுத்திருக்கிரு.ர். “The man who will mercilessly cheat widows and orphans, and do the vilest deeds for money, is worse than any brute, even if he lives entirely on grass.” [Vivekananda]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/168&oldid=1326725" இலிருந்து மீள்விக்கப்பட்டது