பக்கம்:தரும தீபிகை 5.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1706 த ரும தி பி கை கால் மறுமையில் அவர் கொடிய துயரங்களை அடைந்து வருந்து கின்றனர். அங்க நரக வேதனைகள் உயிரை நடுங்கச் செய்கின் றன. கொலையால் விளைவன தொலையாத துயரங்களாயின. சிலையில்ை மாக்கள் கொன்று செழுங்கடல் வேட்டம் ஆடி வலையில்ை மீன்கள் வாரி வாழுயிர்க் கூற்றம் ஆன கொலைகரைக் கும்பி தன்னுள் கொழுங்கழல் அழுத்தி யிட்டு நலிகுவர் நாளும் நாளும் நரகரை நாம வேலோய்! (1) வெந்துருக் குற்ற செம்பின் விதவையுள் அழுத்தி யிட்டும் எந்திர ஊசல் ஏற்றி எரியுண மடுத்தும் செக்கில் சுந்தெழுங் தரைத்தும் போகச் சுண்னமா துணுக்கி யிட்டும் மந்தரத் தனேய துன்பம் வைகலும் உழப்ப மாதோ! (2) (சீவகசிந்தாமணி) ஊன் உண்ணவிரும்பி மீன் மான் கோழி முதலிய பிராணி களைக் கொன்றவர் மறுமையில் கொடிய துன்பங்களை அடைந்து வருக்தி அலமந்து உழல்வர் என இவை உணர்த்தியுள்ளன. புலையை விரும்பிக் கொலை புரிபவர் இவ்வாறு தொலையாத துயரங்களில் அழுந்தி அழிவதை உணர்ந்து சிந்தியாமையால் ஊனமான கொலைகளை ஈனமாகச் செய்து மக்கள் இழிந்து கழிகின்றனர். செய்த தீவினைகள் சேர்ந்து கொல்லுகின்றன. பிற உயிர்களை வருந்தச் செய்பவர் தம் உயிரை அநியாய மாப் அவலப்படுத்தி அழித்து வருகின்றனர். அழிவு நிலை தெரியாமல் விழி மூடி இருப்பது பழி மூடமாயுள்ளது. உயிர்களைக் கொல்லுவது மாத்திரம் கொலை அன்று; பிறர் உள்ளம் துடிக்கக் கொடிய சொல்லுகளைச் சொல்லினும் கொலையாம். துயரமான பழிச்சொல் கொலையினும் கொடியது. இயல்பாகப் புலால் உண்ணுதவரும் கொடிய கொலை பாதக மான சூழ்ச்சிகளையும் பேச்சுகளையும் குழ்ந்து பேசி வருகின்ற னர். கோழி ஆடுகளை இவர் கொல்லாதிருப்பினும் மனித உள்ளங்களையும் புனித உயிர்களையும் கொன்று வருதலால் இப் புல்லர் பொல்லாத கொடிய கொலையாளிகளே ஆகின்றனர். காங்கள் புலால் உண்ணுேம்; உயர்ந்த சாதியார் என்று அவர் உள்ளம் செருக்கி நிற்கின்ருர். ஊனே அருங்காமையால் மாத்திரம் உயர்வு வந்து விடாது; யாருக்கும் இடர் புரியாமல் இனிய நீர்மையோடு ஒழுகி வரும் அளவே பெருமை கழுவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/167&oldid=1326724" இலிருந்து மீள்விக்கப்பட்டது