பக்கம்:தரும தீபிகை 5.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. 6) α π 8ου 1705 ஒர் உயிரை அது வாழுகின்ற உடம்பிலிருந்து வேறு பிரித்து விடுவதே கொலை என்று கூறப்படுகிறது. உயிரை நீக்குங்கால் உடல் சிதைக்கப்படுகிறது; உயிர் பதைத்துத் துடிக்கிறது. இவ் வாறு கொடிய மரண வேதனைகள் மருவி யிருத்தலால் கொலை செய்கின்றவன் நீசப் பாவி என்று எசப்படுகின்ருன். மனிதக் கொலை பகை கோபம் முதலிய காரணங்களால் நிகழுகின்றது. தான் செய்த கொலையை ஒருவன் எவ்வளவு மறைத்தாலும் அது வெளிப்பட்டு விடுகின்றது. தீய பாவம் ஆதலால் தெய்வம் அதை வையம் அறியச் செய்து விடுகிறது. இயற்கை நியமம் அதிசய விசித்திரமா வியப்பை விளைத்துள்ளது. “For murder, though it have no tongue will speak With most miraculous organ ” [Hamlet 2-2.] கொலைக்கு வாய் இல்லை ஆயினும் தன்னை அது அம்புக மாய் வெளிப்படுத்தும் ' என்னும் இது இங்கே அறிய வுரியது. “Murder will speak out of stone walls” [Emerson] கல் கோட்டையால் மறைத்து வைத்தாலும் செய்த கொலை தானகவே உண்மையை உலகம் அறிய நன்கு சொல்லி விடும்' என எமர்சன் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். ஒத்த மனிதனைக் கொல்வது கொடிய கொலைக்குற்றம் ஆதலால் அங்ங்னம் கொன்றவன் சமுதாய நீதியால் கொல்லப் படுகிருன். சிரச்சேதம், துளக்கு முதலிய அரச தண்டனைகள் கொலையாளிகளுக்காக அமைந்துள்ளன. கொடுந் தீமைகளைச் செய்தவர் கடுந்துயரங்களை அடைய நேர்கின்றனர். அரசும் தெய்வமும் மனித சமுதாயத்தின் பாதுகாப்புகளாய் மருவி யுள்ளன. செய்த பிழைகள் சித்திரவதைகளைச் செய்துவரு கின்றன. இவ் வுண்மைகளை ஈண்டு உய்த்துணர வேண்டும். இத்தகைய கண்டனைகளை நேரே இங்கு அடையாமல் வேறே தெய்வ தண்டனைகளுக்குள்ளான கொலைகளை மனிதர் புலையாச் செய்து வருகின்றனர். புலால் உண்னும் ஆசையால் கொலைகள் பல நேர்ந்துள்ளன. பறவைகளையும் மிருகங்களையும் பிடித்து வதைத்து அவற்றின் உடல்களைச் சமைத்து உண்டு வருபவர் கொலைப் பாவங்களைக் கொடுமையாச் செய்து வரு கின்றனர். எளிய பிராணிகளை வதைத்து வருகிற இந்தப் பாவத் 214

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/166&oldid=1326723" இலிருந்து மீள்விக்கப்பட்டது