பக்கம்:தரும தீபிகை 5.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. க ர வு 1557 உளேய உள்ளழித்து ஒன்றல வேதனே வளைய வாங்கி வருத்தம் உறுக்குமே.” (சூளாமணி) களவு புரியின் அளவிடலரிய இழிதுயர்கள் வரும்; அதனை ஒழித்து வாழுங்கள் என்னும் இது ஈண்டு ஊன்றி உணரவுரியது. 'பீடில் செய்திகளால் களவில் பிறர் விடில் பல்பொருள் கொண்ட பயன்எனக் கூடிக் காலொடு கைகளேப்பற்றி வைத்து ஓடலின்றி உலேயக் குறைக்குமே.” (வளேயாபதி) வஞ்ச வினைகள் புரிந்து பிறரை ஏமாற்றிப் பொருளைக் கவர்ந்தவர் படுத்துயரங்களை இது விளக்கியுள்ளது. இன்னவாறு தனக்கு அல்லல் அவலங்களைத் தருகிற கரவை ஒருவன் உறவாக் கொள்ளுதல் எவ்வளவு மதியினம்! பிறரை வஞ்சித்து விட்டதா கக் களித்து வருகிறவன் கன்னேயே வஞ்சித்து அழி துயாங்களை விளைத்துக் கொள்ளுகிருன். விளைவுநிலை தெரியாமல் விழிமூடி யுழல்வது வியப்பாயுள்ளது. வஞ்சம் ஏறிய அளவில் மனிதன் நஞ்சமாய் மாறுகிருன். அவனைக் கொடிய' සෟෂේ நச்சுப் பாம்பா கக் கருதி விலகி உறுதி காண வேண்டும். நெஞ்சத்தோர் அன்பின்றி கின்றும் நெடுமொழியால் வஞ்சித்து வாழ்வார் வரக்கண்டால்-நஞ்சொத்த ரேரென அஞ்சி நெறிக்கொள்க நேர்மையுறு சீரரையே ஆர்வமுடன் சேர்." பொல்லாத வஞ்சகரை அஞ்சி ஒதுங்கி நேர்மையான நல்ல நீர்மையாளரை நயந்து கொள்க என்னும் இதனை உணர்ந்து கொள்ளுக. இனிய நீரரோடு சேர்வது இன்பம் சார்வதாம். தனது நெஞ்சம் கரவாப் ஒருவன் வஞ்சிக்கப் புகின் அவனைப் பிறரும் வஞ்சிக்க நேர்கின்றனர். இவ்வாறு நெஞ்சக் கரவுகள் தொத்து வியாதிகள்போல் பெருகி விரிந்து மனிதசமு தாயத்தை மாசுபடுத்தி நீசம் புரிந்துள்ளன. “Men were deceivers ever.” (Shakespeare) மனிதர் என்றும் வஞ்சகர்களாயுள்ளனர்' என ஆங்கில மேதை இவ்வாறு உலக நிலையை நினைந்து உள்ளம் வருந்தி உரைத் திருக்கிரு.ர். புல்லிய காவால் மாக்தர் புன்மை தோய்ந்துள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/18&oldid=1326575" இலிருந்து மீள்விக்கப்பட்டது