பக்கம்:தரும தீபிகை 5.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ கா லை 1721 அரிய உறுதித் துணையாய் அமைந்திருந்த சிறிய தந்தையை வறிதே இகழ்ந்து பேசியதால் அந்த வில் வீரனுடைய ஆதரவை அடியோடிழந்து துரியோதனன் குடியோடு அழிந்து தொலைக் தான். குலேதுடிக்கப் பேசினன் குலம் துடிக்க அழிந்தான். இன்சொல் எவரையும் உறவாக்கி இன்பம்கருகிறது; புன் சொல் எவ்வழியும் வெவ்விய பகைகளை விளைத்து வெந்துயர் புரி கின்றது. உரையின் நலன் அளவே உயர்வுகள் உளவாகின்றன். இன்சொலான் ஆகும் கிளேமை; இயல்பிலா வன்சொலான் ஆகும் பகைமைமன்-மென்சொல்லின் ஆய்வின்ை ஆாருள் அவ்வருளி மைனத்தான் விவிலா விடு பெறும், 1. (நான்மணிக்கடிகை) இனிய சொல்லால் வரும் உறுதிகலங்களை இது உணர்த்தியுளது. சிதைவுரையான், செற்றம் உரையான்; சீரில் லார் இயல்புரையான், ஈனம் உரையான்---கசையார்க்கும் கூடுவது ஈவானேக் கொவ்வைபோல் செவ்வாயாய்! நாடுவர் விண்ணுேர் நயந்து, (ஏலாதி) யாருக்கும் அல்லல் நேராமல் நல்ல வார்த்தைகளையே பேசி வரின் அவனைத் தேவர்கள் ஆசையோடு விரும்பி மகிழ்வர் எனக் கணிமேதையார் என்னும் பெரியார் இவ்வாறு கூறி யுள்ளார். சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். - (குறள், 98) பிறர் மனம் கோகாதபடி இனிய மீொழிகளை இகமாகப் பேசி வருபவன் இம்மை மறுமை ஆகிய இருமையிலும் இன்பம் பெறுவான் எனத் தேவர் இங்ஙனம் குறித்துள்ளார். தன் உயிர்க்கு அமிர்கமாய் இன்பம் கருகிற இத்தகைய ால்ல உரைகளைப் பேசிப் பழகாமல் பொல்லாத புலமொழிகளைப் பேசி இழிவது எவ்வளவு மடமை எத்துணைப் பரிதாபம் உய்த் துணர வேண்டும். உணர்வின் நிலையை உரை உணர்த்துகிறது. வாயினுல் சொல்லுகிற கொடிய சொல் கையினல் கொல் அகிற கொலையினும் கொடியதாம்; ஆதலால் அவ்வாறு பேச லாகாது. பேச்சை நயமாப் பேணிவரின் மர்ட்சி வியன மருவி வரும். எவ்வழியும் இனியமொழிகளையே பேசி இன்பம்பெறுக. 216 J

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/182&oldid=1326739" இலிருந்து மீள்விக்கப்பட்டது