பக்கம்:தரும தீபிகை 5.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. .ெ க 2ல I723 வலன்போடு நேரே கொழுது வருவதாம்; ஆகவே அந்த மாதவ னிடம் மாதேவன் மகிழ்ந்து என்றும் ஆதரவாப் விளங்குகிருன். 'கொல்லாத மாதவர்கள் உள்ளமே கோயிலாக் கொண்டிலங்கு அருள் கிதியமே!' எனப் பரமபதி இவ்வாறு கதிகள் பல பெற்றிருத்தலால் கொல்லா விரதிகளுடைய மகிமை மாண்புகளை உய்த்து உணர்ந் துகொள்ளலாம். அருளியல்பு அதிசய நலங்களை அருளுகிறது. இனிய இயல்பால் மனிதன் புனிதனுய் உயர்கின்றன். இன்னத செயலால் அவன் இழிந்து படுகின்ருன். எல்லாப் பிராணிகளுள்ளும் மனித இனம் உயர்ந்தது; அந்த மனித சமுதாயத்துள் கொல்லாமை முதலிய நல்ல நீர்மைகளை யுடையவர் எல்லாவகையிலும் உயர்ந்தவராகின்ருர், ஆகவே எவ் வழியும் சிறந்து ஒளிமிகுந்து உயர்கதிகளை அடைகின்ருர். பிறக்க பிறப்பைச் சிறந்ததாக உயர்த்திப் பெரு மகிமை களே அருளி வருதலால் கொல்லாமை அருந்தவ நிலையமாய்ப் பொருந்தியுள்ளது. அதனல் அரியபல நன்மைகள் விளைகின்றன. கொல்லாமை ஆகிய இந்த விரக ஒழுக்கமுடையவர் நல்ல வராய் உயர்ந்தார்; அல்லாதவர் பொல்லாதவராய் இழிந்தார். “ஊற்றமிகும் சராசரத்துள் உயர்ச்சி சரம்; சரத்துள்ாரர்; கரர்தம் உள்ளும் ஏற்றமும் தாழ்ச்சியும்.உள; பல்உயிர் செகுத்துஉண்டு உடலே வளர்த்திடும்.கீழ், அம்மேல் சாற்றும்உயிர்க் கொலைபுரிதல் துயர்நெடுநாள் - என்றும்உடல் தான் பொய் என்றும் தேற்றமிக்கு என்றுஉயிர் தன்மைவிட்டினும் அவற்றின் உயிர்புரக்கும் திதி லோரே." (கொலேமறுத்தல்) மனித சாதியுள் உயர்ந்தவர் இவர், காழ்ந்தவர் இவர், என இது வரைந்து காட்டியுளது. புலால் உண்ணும் கசையால் உயிர் களைக் கொல்பவர் இழிந்த கீழ்மக்கள்; அங்ங்னம் கொல்லாமல் அருள்புரிந்து வருபவர் உயர்ந்த மேன்மக்கள் என்ற குறித்திருக் கலால் கொலையின் பழியையும், கொல்லாமையின் ஒளியையும் தெளிவாய் உணர்ந்து வழிமுறைகளைத் தேர்ந்து கொள்ளலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/184&oldid=1326741" இலிருந்து மீள்விக்கப்பட்டது