பக்கம்:தரும தீபிகை 5.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1730 த ரும தீ பிகை இகழ்ச்சிகளைக் கழுவிக்கொண்டே புகழ்ச்சியை விழைவது எவ்வளவு பேகைமை பழி வழிகளை அடியோடு விலகியபோது தான் புகழ் அவனை விழிதிறந்து பார்க்கிறது. அந்தப் பார்வை யைக் கூர்மையாயுணர்ந்து நேரே சீர்மையில் உயர்ந்து கொள்க. ஈன நினைவால் இழிபழிகள் ஏறுமே மானவினை செய்க மதித்து. இதனே நினைவில் இருக்தி நிறைபுகழ் கானுக. =-m or --- 712 பல்லோர் வெறுத்துப் பழிக்கப் படுவதே பொல்லாப் பழியாம் பொருந்தற்க-எல்லாரும் போற்றி மகிழும் புகழ்வினையை எஞ்ஞான்றும் ஆற்றி வருக அமர்ந்து. )ع( இ-ள். பலரும் வெறுத்து இகழ்ந்து பேசுவது ստ என வந்தது; அந்த இழிநிலையை மருவாமல் புகழுக்கு உரிய உயர்வினைகளைச் செய்து வருக; அவ்வாறு வரின் இசையும் இன்பமும் பெருகி வரும்; இவ்வுண்மையை உணர்ந்து உய்தி பெறுக என்பதாம். மனிதன் மனச்சான்று உடையவன். அந்த மன உணர்ச்சி புனித நிலைகளில் பழகி இனிது வளர்ந்து வரின் அங்க மனிதன் தெய்வத்கேசை அடைந்து கொள்ளுகிருன். மனமே சாட்சி யாக எவன் நடந்து வருகிருனே அவன் அரிய ஒரு நீதிமானப் நிலவுகிருன் , பெரிய மகிமைகள் எ ல்லாம் அவனிடம் உரிமை யாக வந்து அடைகின்றன. இந்தகியதியை இழந்தபோது மனிதன் இழிந்து படுகிருன். இழிநிலை தெரியாமல் அழிதுயருறுகிருன். அரச கண்டனைக்கு அஞ்சியும், தெய்வ தண்டனைக்குப் பயந்தும், ஏதாவது ஒர் ஊதியம் கருதி கசை மிகுந்தும் கடந்து வரும் நடைகள் எல்லாம் கடையர்களுடையன என்று இழிக்கப்பட்டுள்ளன. கீழ்மை நீங்க மேன்மை ஓங்குகிறது. அச்சமே கீழ்களது ஆசாரம் எனக் கீழ்மக்களுடைய நிலை மைகளைத் தேவர் இப்படிக் குறித்துக் காட்டியுள்ளார். அடி, உதை, சிறை முதலிய கொடிய தண்டனைகளுக்கு அஞ்சி ஒழுங் காப் நடந்து வருவது இழிக்க மக்களின் நிலை என்றதனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/191&oldid=1326749" இலிருந்து மீள்விக்கப்பட்டது