பக்கம்:தரும தீபிகை 5.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி 1729 வசை வராமல் பாதுகாத்து எவ்வழியும் இசை பெற்று வாழ்வதே இன்பவாழ்வாம். மேன்மையான அந்த இனிய வாழ்வை அடைய விரும்பினவன் கீழ்மையான இழிவுகளை எவ்வகையானும் யாதும் யாண்டும் திண்டலாகாது. பழிவினைகள் இழிவையும் அழிவையும் தரும்; ஆதலால் அவற்றை அணுகாமல் வாழ்வதே அறிவுடைமையாம். எள்ளல் இளிவுகளை எதிர் அறிந்து விலக்கி உள்ளம் தெளிந்து வாழ்பவர் உயர்ந்த மேன்மக்களாய்ச் சிறந்து ஒளிபெற்றுள்ளனர். கள்ளன்மின் களவாயின. யாவையும்; கொள்ளன்மின் கொலே கூடிவரு மறம்: எள்ளன்மின் இலர்என்று எண்ணி யாரையும்; நள்ளன்மின் பிறர் பெண்ணெடு கண்ணன்மின். (க) பொய்யன்மின் புறங்கூறன்மின் யாரையும் வையன்மின் வடிவல்லன சொல்லிநீர் i. உய்யன்மின் உயிர்கொன்று உண்டு வாழுநாள் செய்யன்மின் சிறியாரொடு தீயன. (e-) -- (வளையாபதி) பழியான செயல்களை இவை வரைந்து காட்டியுள்ளன. இத்தகைய இழிவுகளில் யாதும் இழியாமல் உத்தமனப் உயர்ந்துகொள்ளவேண்டும். புகழுக்கு உரிய மூல காரணத்தை ஒருவன் போற்றிவரின் அது தானகவே அவனை நாடி ஒடிவரும். உரிமையைச் செய்து கொள்ளாமல் பெருமையை அடைய விரும்பின் அது பிழையிடைப்பட்டுச் சிறுமையாய் முடியும். f ஈனமான இழிந்த நிலைகளில் இருந்துகொண்டே தம்மை உயர்ந்தவராகப் பிறர் மதிக்கவேண்டும் என்று பலர் மதி கெட்டுத் திரிகின்றனர். மதிகேடு மானக் கேடாப் கின்றது. “Men the most infamous are fond of fame, And those who fear not guilt yet start at shame.” (Churchill) மிேகுந்த பழியுடையவரும் புகழை அவாவி அலைகின்றனர்; பழிக்கு அஞ்சாக அவர் மேலும் இலச்சை கெட்டு அவமான மாய் இழிந்து உழலுகின்றனர்' எனச் சார்லஸ் சர்ச்சில் என்ப வர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். விணுசை வெட்கக்கேடாகிறது. 217

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/190&oldid=1326748" இலிருந்து மீள்விக்கப்பட்டது