பக்கம்:தரும தீபிகை 5.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1728 த ரும தீ பி. கை உவந்துபேசிப் புகழ்ந்துவரும்படி ஒருவன் நடந்துவரின் அவன் சிறந்த புகழ் ஆளன் ஆகின்ருன்; பிறப்புக்கு உரிய அச்சிறப்பை அடையாதிருந்தால் அவன் பிறவிப் பயனே இழந்தவனுகிருன்; அந்த இழவோடு தொலையாமல் இழிந்து பழியும் செய்ய நேரின் அவன் இழிமடையய்ைக் கழிந்து அழிவினையே அடைகின்றன். பழி என்னும் சொல் காரணக்குறியாய் வந்துளது. உலகத்தார் இகழ்ந்து பழிப்பது எதுவோ அது பழி என நேர்ந் தது. உள்ளம்வெறுத்துப் பேசுவதால்.அதன் உருவம் தெரியலாம். களவு செய்தல், பொப்பேசல், கொலைபுரிதல், பிறர் மனைவி யரை விரும்பல் முதலிய ைேமகள் யாவும் பழிகள் ஆதலால் இவற்ருேடு பழகினவர் பழியாளராப் இழிவுறுகின்றனர். தமக்கு இழிவையும் ஈனக்கையும் துயரையும் தருகிற பழி வினேக ளைத் தழுவிமனிதர் பாழ்படுவது முழுமடமையாய் முடிந்துளது. தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்றே எவனும் எண்ணு கிருன். இந்த ஆசை இயல்பாக அமைந்திருந்தும் மயலாயிழிந்து அவமானங்களைச் செய்த அவமதிக்கப்படுவது அதிசய வியப்பா யுள்ளது. வினேவிளைவுகள் தெரியாமல் வினே விளிவுறுகின்றனர். தனக்கு நேருகிற இழிபழிகளை எண்ணி நோக்காமல் விழி வாழ்வாகிறது. ஆகவே எவ்வழியும்.அது வெவ்வியபழி கருகிறது. உயிருடையஞயினும் பழிபட நேரின் அவன் செத்தவனே ஆகின்ருன். அவனது வாழ்வு கடைப்பினம்போல் நகைப்புக்கு இடமாப் நவை பல படிந்து அவமானமாய் இழிவுறுகின்றது. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய வாழ்வாரே வாழா தவர். | - (குறள் 240) தம்பால் பழிநேராமல் வாழ்பவரே உயிரோடு வாழுகின் ருர்; அங்கனமின்றிப் பழிபட வாழ்பவர் உயிர் இருந்தாலும் செத்தவரே யாவார் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பழி ஒருவனைச் செத்த சவமாக்கிச் சீரழித்துவிடும்; இந்தப்பே ரிழவைச் சேரலாகாது என்பது இதில் உய்த்து உணர வந்தது. வசை= பழி. இசை = புகழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/189&oldid=1326747" இலிருந்து மீள்விக்கப்பட்டது