பக்கம்:தரும தீபிகை 5.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்திரண்டாவது அதிகாரம். பழி. அஃதாவது இழிவான செயல் இயல்களால் விளையும் வசை. இசை பெற வந்த மனிதன் வசையுற வாழலாகாது என இது உணர்த்துகின்றது. புலே கழிந்து கொலை ஒழிந்து பழி நீங்கி வாழவேண்டும் என்னும் குறிப்பால் அவற்றின்பின் இது வைக்கப்பட்டது. வைப்பு முறை உய்த்து உணரத் தக்கது. 711 பழிபாவம் என்னும் பழிச்சொல் மனிதன் இழிநிலையை நேரே எடுத்து-வழியோடு காட்டும் அதனிலையைக் கண்டு தெளிந்தாரேல் - வீட்டுகிலே காண்பார் விரைந்து, (க) இ-ள். பழி பாவம் என்னும் இழிமொழிகள் மனிதனது இழிவை யும் அழிவையும் விழி கெரிய நேரே விளக்கி நிற்கின்றன; அந்த இழிக்க நிலையை அறிந்து தெளிந்தவர் உயர்ந்த விட்டு நெறியை விரைந்து காண விழைந்து வியனிலையில் விளங்குவார் என்க. பிறந்த மனிதன் சிறந்தவளுப் உயர்ந்துகொள்ளவேண்டும்; அவ்வாறு உயர்ந்தபோதுதான் அப்பிறப்பு சிறப்புடையதாம். அங்ஙனமின்றி வீணே நிற்பின் அப்பிறவி ஈனமாய் இழிவு அறும். பறவை விலங்குகளைவிட உயர்ந்த பிறவியில் வந்த மனிதன் ஒரு பயனுமின்றிவறிதே வளர்ந்துகின்று இறந்துபோவது இழிந்த போக்காம். இழிவு நேராமல் விழுமிய கிலையில் ஒழுக வேண்டும். "காதவழி பேர் இல்லான் கழுதை' என்பது பழமொழியாய் வந்துள்ளது. தான் பிறந்த ஊரைச் சுற்றிச் சிறிது தாரமாவது தன் பேர் துலங்கும்படி செய்ய வில்லையானல் அந்த மனிதன் ஒரு கழுதைப் பிறப்பாம் என நிந்தித்திருத்தலால் பேர் சீர்பெருத வாழ்வு எவ்வளவு இழிவுடை யது எத்தனை பழி படிந்தது என்பது எளிது தெளிவாம். உருவம் தோன்றிய போது அங்கே பெயரும் தோன்று கிறது; தனக்குப் பெற்றேர் இட்ட அப்பெயரை மற்ருேரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/188&oldid=1326745" இலிருந்து மீள்விக்கப்பட்டது