பக்கம்:தரும தீபிகை 5.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1732 த ரும பிேகை o காட்டுகிறது. பழியும் பாவமும் புகையும் தீயும் போல் நெருங் கிய தொடர்புடையது. ஒருங்கிய உறவாப் உறைந்திருப்பது. குழித்துழி கிற்பது நீர்தன்னேப் பல்லோர் பழித்துழி நிற்பது பாவம்---அழித்துச் செறுவுழி நிற்பது காமம் தனக்கொன்று உஆறுவுழி நிற்பது அறிவு. (நான்மணிக்கடிகை, 80) குழியில் நீர்பெருகி நிற்பது போல் பழியுள் பாவம் பெருகி நிற்கும் என இது குறித்திருக்கிறது. பழி பாவம் என இரண்டும் ඔෆ. தொகையாய் வழங்கப்படுதலால் இவற்றின் நிலைகளை யும் புலைகளையும் நேரே உணர்ந்து கொள்ளலாம். பழிக்கு நானுகிற உணர்ச்சி மனிதனுக்கு உயர்ச்சியை அருளுகிறது; அது மழுங்கிய அளவு அவன் இழிந்து படுகிருன். பழி அஞ்சான் வாழும் பசுவும் பரிவில்ை கொண்ட அருந்தவம் விட்டானும் --- கொண்டிருந்து இல்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர் நெல்உண்டல் நெஞ்சிற்கோர் நோய். (திரிகடுகம், 79) பழிக்கு அஞ்சாகவன் உருவில் மனிதனுயினும் ஒரு மிருக மே; அவன் நல்ல நெல் அன்னம் உண்பது நவையாம் என நல்லாதனுர் என்னும் சங்கப் புலவர் இங்கனம் கூறியிருக்கிரு.ர். பழி வழிகளை நாணி விலகாதவன் எவ்வழியும் இழிநிலையா ளனய் ஈனம் உறுகின்ருன்; இவ்வாறு இழிந்து போகாமல் தெளிந்து விலகிச் சீர்மையா ஒழுகிஉயர்ந்து கொள்ளவேண்டும். =-o-o-o: 713. இழிவு தருஞ்செயல் எள்அள வேனும் அழவுதரு நஞ்செனவே அஞ்சி-விழுமியங்ாண் ஆழ்வார் அகல்வார் அகத்துநாண் இல்லாதார் வீழ்வார் பழிமேல் விரைந்து. (E) இ-ள் =عی. இழிவான செயல் எள் அளவே ஆலுைம் அது கொடிய நஞ்சு என்று அஞ்சி மேலோர் அதனை விலகி வாழுவார்; கீழோர் அதனை விழைந்து தழுவி மகிழ்ந்து கொள்ளுவார் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/193&oldid=1326751" இலிருந்து மீள்விக்கப்பட்டது