பக்கம்:தரும தீபிகை 5.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி. 1733 உயர்வு இழிவு என்னும் மொழிகள் மேன்மையையும் கீழ் மையையும் முறையே உணர்த்தி வருகின்றன. இனிய நீர்மைகள் மேன்மையை அருளுகின்றன; கொடிய தீமைகள் கீழ்மையைத் கருகின்றன. நெறிமுறையே நீதியோடு ஒழுகி வருகிற மனிதன் பெரியவனப் உயர்கின்ருன்; அவ்வாறு இல்லாதவன் சிறியவனப் இழிகிருன். பெருமையும் சிறுமையும் செயல்வழி வருகின்றன. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. (குறள், 157) ஒரு மனிதன் மேன்மை பெறுவதும், பழி அடைவதும் எதல்ை என்பதை இது விழி தெரிய விளக்கியுள்ளது. மிருகங் களைப் போல் இழிந்து நில்லாமல் மனிதன் உயர்ந்த நிலையில் பிறந்திருக்கிருன். அறிவுடையனப்ப் பிறந்துள்ள தனது பிறப் புக்கு ஏற்ப செறிமுறையே அவன் ஒழுகி வர வுரியவன்; அவ் வுரிமையில் வழுவிய போது இழிவும் பழியும் அவனைத் தழுவிக் கொள்கின்றன. கிலே தவறின் புலை புகுந்து துயர் புரிகின்றது. ஒளி ஒழிய இருள் புகுதல் போல் ஒழுக்கம் ஒழிய இழுக் கம் வருகிறது. பிழைபாடான இழிவுகளில் இழியாமல் மனிதன் ஒழுகிவரும் அளவே அவனுக்கு உயர்வுண்டாகிறது; வழுவின் அவ்வளவிலேயே பழியும் துயரும் பெருகி விடும் என்க. நஞ்சு என அஞ்சி என்றது இழிவான செயல் அழிவே கரும் ஆதலால் அகனக் கொடிய விடம் என்று கருதி ஒழிய விட வேண்டும் என்பது உணர வந்தது. பழிக்கு அஞ்சுகின்ற அச்சம் ஒருவனே உச்ச நிலையில் உயர்த்தியருளுகின்றது. - அச்சமும் காணமும் நல்ல ஒழுக்கத்தின் உறவுகளாயமைக் துள்ளன. மேலான நன்மைகளை அருளுகின்ற இவை இல்லாத போது அங்கே பொல்லாத தீமைகள் புகுந்து கொள்ளுகின்றன. பழிக்கு அஞ்சாதவரே. a கையும் துடுக்காகத் துணிந்து செய்ய நேர்கின்ருர். பலரும் பரிந்து வருக்தும்படி ஒரு பெண் னின் ஆடையைப் பண்டு ஒருவன் விரைந்து உரிந்து மானபங் கம் செய்தானே அது எவ்வளவு ஈனம் எவ்வளவு பழி அச்சா தனனன்று சூழ்ந்தொன்றும் பேணுமல் அச்சபையில் கற்புடையாள் ஆடைதனேக்-கொச்சையுறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/194&oldid=1326752" இலிருந்து மீள்விக்கப்பட்டது