பக்கம்:தரும தீபிகை 5.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1734 த ரும தீபிகை பற்றி யுரிந்தான் படுபழியர் நாணுவரோ குற்றம் புரிந்து கொளல். துரியோதனன் கம்பி துச்சாதனன். மிக்க துடுக்கன். துரோபகையை அரசவையில் கிஅறுத்தி யாதும் கூசாமல் அவளது துகிலை உரிந்தான்; உடையை அவிழ்க்க அக் கடையனே உலகம் கொதித்து வைதது; அகனல் கொடிய பழியும் நெடிய பாவமும் அவனுக்கு நேர்ந்தன. முடிவில் அவன் குடியும் அடியோடு அழிந்தது. படியிலும் பல துயரங்கள் படிந்தன. . துரோபதை உரைத்தது. அரசவையில் எனேஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் திண்டி விரைசெயளி யினம்படிதார் வேந்தர்எதிர் தகாதனவே விளம்பு வோரைப் பொருசமரில் முடிதுணித்துப் புலால் நாறு வெங்குருதி பொழிய வெற்றி முரசறையும் பொழுதல் லால் விரித்தகுழல் இனி எடுத்து முடியேன் என்ருள். தன்னை அவமானப் படுத்திய அக்கப் பழிகாரன் குடி அடி யோடு அழிந்தபோதுதான் கன் கூக்கலை முடிப்பேன் என்று துரோபதை இவ்வாறு சபதம் கூறி விரதம் பூண்டுள்ளாள். வீமன் குறித்தது. வண்டாரும் குழல்பிடித்துத் துகில் உரிந்தோன் உடற்குருதி வாரி அள்ளி உண்டாகம் குளிர்வதன்முன் இக்கரத்தால் புனல்உண்ணேன், ஒருகால் என்கைத் தண்ட்ால்வெம் புனல் எற்றி மீதெழுந்து --- விழுக்திவலே தண்ணிர் ஆகக் கொண்டாவி புரந்திடுவன் இதுவிரதம் எனக்கு எனவும் கூறினனே. விமன் இவ்வாறு வீர சபதம் கூறியிருக்கிருன். சபக நிலை எவ்வளவு கடுமையுடையது என்பதைக் கருதிக் காணவேண்டும். துச்சாதனன் செய்த இழி பழியால் கொடிய பாவத்தை அடைந்து அந்தக் குடி அடியோடு அழிந்தது. செல்வக் குடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/195&oldid=1326753" இலிருந்து மீள்விக்கப்பட்டது