பக்கம்:தரும தீபிகை 5.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1742 த ரும தீ பிகை கே குடிப்பேன் எனக் குடி கொடி கட்டி உள்ளது; அவ் வுண் மையை உணராமல் வடிகட்டிய முட்டாள்கள் அதைக் குடித்து அடியோடு அழிகின்ருமே! என்று ஒரு பெரியவர் பரிந்து இரங் கியுள்ளார்; அந்தப் பரிவு நிலை ஈங்கு அறிந்து கொள்ள வுரியது. பொய் என்னும் சொல் பொள்ளலுடையது, அழிவு நிலை யது என்னும் பொருளில் அமைந்தது. பொய் பேசுவது கொ டிய பாதகம். பொய் பேச ஒருவன் இசைந்தான் ஆனல் அவன் களவு கொலை முதலிய பாதகங்கள் எதையும் செய்யத் தணிந்து விடுவான். பழி பாவங்களுக்கெல்லாம் மூல காரணமாய்ப் பொப் வழி கோலி வருகலால் அது கொடிய பாவமாய் நின்றது. பொப் பேசாத அளவு மனிதன் புனிதன் ஆப் உயர்கின் ருன்; அதைப் பேசிய அளவு அவன் நீசனுப் நாசமே அடை கின்ருன். பொய் வெய்ய துயரங்களிலேயே வீழ்த்தி விடுகிறது. சத்தியம் ஈசனுக்கு வடிவம், ஆகவே அசத்தியத்தின் நிலையை நன்கு அறிந்து கொள்ளலாம். பெப் பேச நினைந்த போதே கெஞ்சம் நிலை குலைந்தது; நா பாழ்பட்டது; உயிர் நாச மாயது. இந்த நாச நிலைகளை உணராமல் நீசமாய்ப் பொப் பேசி மனிதன் அழிக் து படுவது பாசமயக்கின் படுதுயாப் நின்றது. மெய் இனிய அமுகமாய் என்றும் இன்பமே அருளுகிறது. பொப் கொடிய விடமாய் யாண்டும் துன்பமே தருகிறது. பழியும் துன்பமும் கருவதை விழி தெரியாமல் கழுவி அழி வது முழு மூடமாயுள்ளது. புலையான பொய் ஒழிந்தவர் கலை யான மேன்மைகளை நிலையாக நேரே எ ப்துகின்றனர். பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எ ப்யாமை எல்லா அறமும் தரும். = (குறள், 296) பொப் பேசாமல் ஒருவன் பழகிவரின் புகழ்கள் யாவும் புண்ணியங்கள் எல்லாம் அவனைப் பொருந்தி நிற்கும் என்னும் இது ஈண்டு நன்கு நினைந்து சிந்திக்கத் தக்கது. - அரிய பல புகழ்களையும் பெரிய புண்ணியங்களையும் பொய் யாமை தரும் என்றகளுல் கொடிய பல பழிகளையும், செடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/203&oldid=1326761" இலிருந்து மீள்விக்கப்பட்டது