பக்கம்:தரும தீபிகை 5.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. பழி 1755 வசை ஒழிந்து வாழ்பவனே எங்க வகையிலும் இசைமிகப் பெற்று இன்ப நலங்களை எய்துகின்ருன். தன்னை நல்லவன் என்று பிறர் புகழ்ந்து சொல்லவேண்டும் என்னும் ஆசை எல்லார் உள்ளங்களிலும் உ றைந்திருக்கிறது; இருந்தும் நல்ல வழிகளில்செல்லாமல் பொல்லாத இழிவுகளையே விழைந்து செய்து புலேப்பழிகளையடைந்து பொன்றிமுடிகின்ருர். தமக்கு நேர்கின்ற அழி துயரங்களை அறிந்துகொள்ளாமல் இழிபழிகளில் விழுந்து கவிப்பது ஈன மூடமாயுள்ளது. மதியும் மானமும் உடைய மேன்மக்கள் பழிநிலைகளை எவ்வழியும் அனு கார்; பாண்டும் புகழ் நலங்களைப் பேணிப் புண்ணிய நிலைகளை மருவி எவ்வழியும் செவ்வியராய் அவர் சிறந்து வாழுவார். பாவமும் ஏனேப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார்; சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருகவை ஆற்றுதல் இன் அறு. (நாலடி, 295) சான்ருேர் இயல்பை இது குறித்துள்ளது. இறந்துபட நேர்க்காலும் பழிபாவங்களை அவர் செய்ய இசையார் என்றகளுல் அவரது மனநலமும் மதிமாண்பும் இனிது புலனும். சால்புடைமை சாலவும் மேன்மையாம். பழிபடாமல் வாழ்பவரே ஒளிமிகப்பெற்று உயர்ந்து திகழ் கின்ருர், புனிதமான அந்த நிலையில் வாழ்ந்து வருவதே என்றும் இனிதாம். அல்லதை நீக்கி கல்லதை நோக்கி வாழுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. பழி என்னும் சொல் இழிவு மிகவுடையது. மேலோர் இகழ்ந்து பழிப்பது பழி என வந்தது. மனிதன் அதனை மருவலாகாது. மருவின் இருமையும் இழிவாம். பழிபடியின் அழிவு அடையும். இழிசெயல்களால் அது எழுகின்றது. ஈன வழிகளில் இழியலாகாது. மானம் மரியாதைகளை மருவி வரவேண்டும். இசை கழுவின் வசை ஒழியும். பழி நீங்கி வாழ்வதே விழுமிய வாழ்வாம். எஉ -வது அதிகாரம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/216&oldid=1326774" இலிருந்து மீள்விக்கப்பட்டது