பக்கம்:தரும தீபிகை 5.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1761 செல்லாதபடி அதனை அடக்கி ஆண்டுவருபவரே யாண்டும் பெரி யோராய்நீண்டுவருகிரு.ர்.மனம் அடங்கமகிமைகள்வருகின்றன. பழக்க வாசனைகளாலும் அடுத்துள்ள சூழல்களாலும் மனம் கவருண புலேகளில் செல்ல நேரும்; அங்கனம் நேருங்கால் அதனைத் தடுத்து நல்ல நிலையில் நிறுத்தவேண்டும்; அவ்வாறு நிறுத்த வல்லவரே நெறியுடைய மேலோராய் நிலைத்து விளங்கு கிருர். நீதி நெறியே செல்ல நேரின் அல்லல்கள் நீங்குகின்றன. நல்ல நெறியில் ஒழுகிவந்த ஒருகுலமகன் ஒருநாள் ஒர் அழ கிய மங்கையைத் தனியே கண்டான், இளமையும் எழிலும் இனிய நலனுமுடைய அவளைக் கண்டதும் ஆசை.மீக் கொண் டான்; தையலை நோக்கி மையலால் மயங்கிய அவன் உடனே தன் உள்ளத்தை அடக்கினன்; அயலான் மனைவியாகிய அவ ளைத் தழுவினல் பழியும் பாவமும் விளையுமே என்று உணர்ந்து பயந்து கெஞ்சைத் திருத்தி நெறியே சென்ருன். தன் மனத்தை நோக்கி அதுபொழுது அவன் மதிநலம் கூறிக் தெருளுற அருளி யது அதி விநயமாய் வந்தது. அயலே வருகின்றது காண்க. பழியொடு பாவத்தைப் பாராய்நீ கன்றிக் கழிபெருங் காமநோய் வாங்கி-வழிபடாது ஓடுமனனே! விடுத் தென்னே விரைந்துே காடிக்கொள் மற்ருேர் இடம். o (அறநெறி) "பழிபாவங்களை விளக்க நாடுகின்ற மனமே! என்னேடு கூடியிராதே; அயலே ஒடிப்போப்விடு' என உருத்து உரைத் திருக்கும் இது துணித்து உணரத்தக்கது. உள்ளத்தை நல்ல வழிப்படுத்தி இவ்வாறு நன்கு பாதுகாத்து வருபவரே தீது நீங்கித் தமக்கு இனியராய் எங்கும் உயர்ந்து வருகின்ருர், அல்வழியில் செல்வதால் அல்லலே வரும்; பழிவிரிந்து அழி துயரங்களைச் செய்யும்; இழிசெயல்கள் ஈனனுக்கிவிடும்.ஆதலால் அவன் பாவியா யிழிந்து ஆவி பதைத்து அலமந்து வருந்துவன். “Evil pursueth sinners: but to the righteous good shall bo paid.” [Bible] 'திமைகள் பாவிகளைத் தொடரும்; நீதிமான்களுக்கு நல்ல பலன்கள் வரும்.” என்னும் இது இங்கே அறியவுரியது. பாவம் 221

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/222&oldid=1326780" இலிருந்து மீள்விக்கப்பட்டது