பக்கம்:தரும தீபிகை 5.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1760 த ரும தீ பி. கை இக்கப் பிறவியில் ஒருவன் செல்வம் முகவிய சிறப்புகளை அடைந்து சிறந்த போகங்களை நுகர்ந்துவரின் முன்னமே அவன் நல்ல வினைகளைச் செய்தவனுகின்ருன்; வறுமை முதலிய சிறுமை களை அடைந்து துயரங்களில் அழுந்திவரின் முன்பு பொல்லாத தீவினைகளைச் செய்தவன் என்று தெரிய வருகின்ருன். இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது முன்பு அவர் செய்கையி ேைல முடிந்தது; இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம் அறியாரே. (திருமந்திரம்,267) முன்பு பிறவுயிர்களுக்கு இரங்கி இகம் செய்தவன் பின்பு பெரிய பாக்கிய வானப் இன்பங்களைப் பெறுகின்ருன்; அங்க னம் இகம்புரியாமல் கொடுமை செய்து வந்தவன் வறியனு யிழிந்து துன்பங்களை அடைகின்றன். வினவிளைவுகளின் இந்த கியமங்களே உலக அனுபவங்களால் அறிந்தும் உள்ளம் இரங்கி நல்லது செய்யாமல் பலர் மடமையாய் மடிந்து போகின்ருரே என்று திருமூலர் பரிந்து வருக்தியுள்ளதை இகளுல் அறிந்து கொள்கிருேம். பேதைகள் என்றது தமக்கு வருகிற ஏதங்களை உணராமல் இழிந்து போதலை கினைந்து வந்தது. அல்லல் நேரா மல் தனக்கு நல்லதை நாடிக்கொள்ளுகின்றவன் அறிவாளி ஆகின்ருன்; அல்லாதவன் அறிவிலியாய் அவலமடைகின்ருன். - = பிறர் அல்லல் உறும்படி ஒருவன் செய்ய சேர்ந்தால் அது பொல்லாத பாவமாய்ப் பொங்கி வருகிறது. வரவே எல்லாத் து ட | ங்களும் அகளுல் விளைந்து பாண்டும் அவலங்களைச் செய் கின்றன. செய்த விேனை வெய்ய துயரங்களாப் வருகிறது. சொல்லும் செயலும் நல்லனவாக அமையவேண்டுமா ல்ை தன் உள்ளத்தை ஒருவன் பண்படுத்த வேண்டும். உள்ளம் நல்ல தால்ை எல்லாம் நலமாம்; அந்த மனநலம் அரிய பல மகிமை களை அருளிவரும். அகம் இனிதாகவே யாவும் இன்பமாம். நல்ல மனமுடையவன் எல்லா மேன்மைகளையும் எளிதே னப்துகிருன்; அது பொல்லாதது ஆனல் அவன் அல்லலே அடை கிருன். சுகமும் துக்கமும் அகநிலையால் அமைகின்றன. மேலான கதிகளை அடையவுரியவர் முதலில் தம் உள்ளத் தை கல்லகாக்கிக்கொள்கின்ருர். பொல்லாத வழிகளில் பாதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/221&oldid=1326779" இலிருந்து மீள்விக்கப்பட்டது