பக்கம்:தரும தீபிகை 5.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. பா வம் 1759 கொலைகளே புரிபவ்ர்; பாவத்திலேயே புரண்டுகளிப்பவர் எனக் கவி அவரை இவ்வாறு விளக்கியிருக்கிரு.ர். பாவத்தை மனம் புணர் மணுளர் என்று குறித்திருக்கும் குறிப்பு கலைச்சுவை தோய்ந்து உவப்பு வாய்ந்து வியப்பை விளைத்துள்ளது. H பாவம் கொடிய துயர ங்களை விளைத்து உயிரைப் பாழ்படுத் தும்; அதனேடு சிறிதும் பழகலாகாது; இனிய நீர்மைகளையே பழகிப் புனிகனப் உயர்ந்து தனிமகிமைகளை உரிமையாஅடைக. | - = m. 722 அல்லல் உயிர்கள் அடைய வருவவெலாம் பொல்லாத பாவமாப் பொங்கியே-எல்லா வழியும் துயரை வளர்த்துக் கொடிய அழிகாகில் தள்ளும் அது. (a-)

  • - இ-ள் உயிர்கள் அடைகிற துயரங்களுக்கெல்லாம் பாவமேயாண் டும் மூலகாரணமாய் மூண்டுள்ளது; அது எ வ்வழியும் அல்லல் களை விளைத்து வருத்திக் கொடிய நரகில் உயிரைத் தள்ளிவிடும். மனிதனிடமிருந்து செயல்கள் நிகழ்கின்றன. அவை கல் லவை தீயவை என அயலே அளக் து சொல்லப்படுகின்றன. பிற உயிர்களுக்கு இதமாய் வருவன நல்லவை ஆகின்றன; இட ராய் நேர்வன தீயவை என நின்றன. நன்மையும் தீமையும்

அவற்றின் தன்மைகளால் அமைந்து வருகின்றன. ஒருவனுடைய செயல் இனியது ஆயின் அவன் புனிதன யுயர்கின்ருன்; இன்பகலங்கள் யாவும் அவனுக்குக் தனி உரிமை களாய் அமைகின்றன. செயல் கொடியது. ஆனல் அவன் பாவி பாயிழிகின்றன்; துன்பங்கள் எல்லாம் அவனைத் தொடர்ந்து கொள்கின்றன.கொள் ளவேவேதனைத்தியால்வெந்துதவிக்கிருன். இன்பமும் துன்பமும் தனது செயல் இயல்களால் விளைக் துவருதலால் தானே அவற்றிற்கு மூலகாரணன் ஆகின்ருன்; ஆகவே அவற்றைப் பூரணமாக அவன் அனுபவிக்க நேர்கின் முன். அந்த வினைப்போகங்களை நுகர்வே பிறவிகள் அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப விரிந்து வந்துள்ளன. வினேவிளைவுகளும் நுகர் வுகளும் பெரிய அதிசய மருமங்களாய் மருவி நிற்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/220&oldid=1326778" இலிருந்து மீள்விக்கப்பட்டது