பக்கம்:தரும தீபிகை 5.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1758 த ரும தீ பிகை தொல்வினே வழிய தாகும், தோன்றனு பவங்கள் தந்தம் புல்வினே யால் என்று எண்ணல் புலமையோ ரிடத்தின்ருமால். * - (குசேலர்) தான் செய்த கல்வினையினுல் ஒருவன் இன்பம் 'அடைகி முன்; அல்வினையால் அல்லல் உறுகிருன் என வினையின் விளைவு களை விழிதெரிய விளக்கி இது தெளிவாக உணர்த்தியுளது. தான் சுகமாய் இனிது வாழவேண்டும் என்று விரும்புகிற வன் அவமான காரியங்களைச் செய்யலாகாது. செய்தால் வெப் ப.துயரங்கள் தொடர்ந்து வருத்தும்; அப்பொழுது ஐயோ! என்று அழுது பதைப்பதால் யாதும் பயன் இல்லை; முன்னதா கத் தீதுசெய்யாமல் ஒதுங்கி வாழ்வதே இனிய உய்தியாகும். பாவம் என்னும் சொல் பயங்கரமானது; கொடிய துயரங் களைத் தருவது என்னும் குறிப்பினையுடையது. மனிதன் செய்கிற தீய செயல்களே பாவமாய்ப் பழுத்து வருவதால் அது நோய் களே விளைத்து கொந்து தவிக்கச் செய்கிறது. திவினே மறமே செடியே அகமே அரிதம் கலுடம் பாவம் ஆமே. (பிங்கலம்) பாவத்தின் பெயர்கள் இங்கனம் குறிக்கப்பட்டுள்ளன. கொடிய தீமைகளின் பிண்டமே பாவ்ம் என கின்றது. பிறர் அஞ்சி வருக்கத்தக்க துன்பங்களைச் செப்பவர் பாவிக ளாய் வருதலால் அவர் யாவராலும் வெறுக்கப்பட்டு அடுநரகங் களை அடைந்து படுதுயரங்களையே உறுகின்ருர். பொல்லாத பாவத்தோடு ஒருவன் பழக நேர்ந்தபோதே நல்ல இயல்புகள் எல்லாம் அவனேவிட்டு விலகிவிடுகின்றன. விடவே விடத்தினும் கொடியனுப் விரிந்து எத்திறத்தும் துயர் விளைத்து இழிந்து படுகிருன். அறத்தைத்தின்று அருங்கருணையைப் பருகிவேறு அமைந்த மறத்தைப் பூண்டுவெம் பாவத்தை மணம்புனர் மளுளர் கிறத்துக் காரன்ன நெஞ்சினர் நெருப்புக்கு நெருப்பாய்ப் புறத்துப் பொங்கிய பங்கியர் காலனும் புகழ்வார். o (இராமா, மூலபலம், 6) மூலபலத்தில் சேர்ந்துள்ள அரக்கர் சிலரை இது குறித்து வந்துள்ளது. அருள் அறம் யாதும் அறியாதவர்; கோபத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/219&oldid=1326777" இலிருந்து மீள்விக்கப்பட்டது