பக்கம்:தரும தீபிகை 5.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:17ᏮᏎ த ரும தி பி கை ஒக்கஇப் பவத்தில் இன்பம் ஒருங்கு அனு பவிப்பர்; இன்றேல் மிக்கவெந் துயரத் தாழ்வர் இதற்கு உளம் மெலிதல் என்னே? தேற்றமுற் பவத்தில் செய்த தீங்குகன்கு எனும் இரண்டும் ஆற்றல்சால் கருமம் என்பர் அக்கரு மத்தை நோக்கிச் சாற்றும் இப்பிறப்பில் தக்க தரித்திரம் செல்வம் கல்கிப் போற்றுவன் உயிரை எல்லாம் பொலிசுடர்த் திகிரி வள்ளல்.(2) மைந்தர்கள் தம்மைப் போற்ற வளநிதி வேண்டும் என்ருய்! கந்திய பறவை கானம் நயந்துறை விலங்கு முன்ன வந்தபல் உயிர்க்குச் சேம வைப்புண்டோ வருவாய் உண்டோ? எந்திடத் தேனும் போய் ஒன்று இரப்பது தானும் உண்டோ? அல்லது நாளேக்கு என் செய் வாம் எனும் கவலை உண்டோ? எல்லையில் ஒன்றில்ை ஒன்று இடிப்புண்டு வாழ்தல் உண்டோ? ஒல்லுமஷ் உயிர்கள் தம்முள் உணவிலாது இறந்ததுஉண்டோ? சொல்லரி பரந்த உண்கண் துடியிடைப் பேதை மாதே! (4) கல்லினுள் சிறுதே ரைக்கும் கருப்பை அண்டத்துயிர்க்கும் புல்லுன வளித்துக் காக்கும் புனத்துழாய்க் கண்ணி அண்ணல் ஒல்லுகின் மைந்தர்க் காவாது ஒழிவனே; ஒழியான் உண்மை; மெல்லியல்! கொண்ட துன்பம் விடுவிடு மறந்தும் எண்ணல்! (குசேலோபாக்கியாகம்) வறுமையை நினைந்து மறுகிய மனைவியை நோக்கிக்குசேலர் இவ்வாறு தேற்றியிருக்கிரு.ர். உரைகள் அவருடைய உள்ளத் தெளிவையும் ஞான நிலையையும் நன்கு விளக்கி யுள்ளன. இவ் வளவு பெரிய நல்லவர் நல்குரவால் நைந்தது பழவினைப் பயன் என்று தெரிந்தது. அந்தப் பிறப்பில் அவர் புரிந்து வங்க புண்ணி யத்தால் எண்ணரிய செல்வங்களை எ ப்தி மகிழ்ந்தார். இன்ப கலங்கள் யாவும் நல் வினைகளால் வருகின்றன என்பதை இங்கே அறிந்து கொள்கிருேம். இனிய வினைகள் இன்பங்களை அருளும். செப்த வினையின் விளைவுகளை அன்றி வேறு யாரும் பாதும் அயலே எய்த இயலாது; இது தெய்வ நியமமாயுள்ளது. கன் உயிர்க்கு கல்லதை நா டுகின்றவன் அல்லலான காரியங்களை யா ண்டும் செய்யலாகாது; எவ்வழியும் நல்ல கருமங்களையே பழகி வர வேண்டும். அந்த நல்ல பழக்கம் நலம் பல தருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/225&oldid=1326783" இலிருந்து மீள்விக்கப்பட்டது