பக்கம்:தரும தீபிகை 5.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1777 செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கமாம்; செல்வரைக் காணின் காணும்; உறுதிபெறு விரமும் குன்றிடும்; விருந்துவரின் உயிருடன் செத்த பிணமாம்; * உலகம் பழித்திடும்; பெருமையோர் முன்புசென்று ஒருவரொடு செய்தி சொன்னல் மறுவசனமும் சொலார்; துன்பினில் துன்பமிது வந்தணுகி டாதருளுவாய்! " வறுமையால் நேரும் அவல நிலைகளை விளக்கிக் கொடிய துன்பமாகிய அது அணுகாதபடி என்னைப் பாதுகாத்தருள் என முருகக் கடவுளை நோக்கி ஒரு புலவர் இவ்வாறு உருகி வேண்டியிருக்கிருர். இல்லாத நிலை பொல்லாத புலையாம். 'மிடியிட்ட வாழ்க்கையால் உப்பிட்ட கலம்எனவும் மெய்யெலாம் உள்ளுடைந்து விறிட்ட செல்வர்தம் தலைவாயில் வாசமாய் வேதனேகள் உற வேதனும் துடியிட்ட வெவ்வினேயை ஏவின்ை பாவிகான் தொடரிட்ட தொழில்கள் எல்லாம் அதுண்டிட்ட சாண்கும்பி யின்பொருட் டாயதுன் தொண்டர்பணி செய்வது என்ருே?’ (தாயுமானவர்) மிடி யுற்றபோது மனிதன் அடையும் இழிவு நிலைகளை இது காட்டியுள்ளது. இத்தகைய கொடிய துயரங்கள் நீங்கி உப்ய வேண்டுமே! என்று தாயுமானவர் இறைவனே நோக்கி மறுகி யிருக்கிரு.ர். புண்ணியசீலரான அவர் தன்னைப் பாவி என்று குறித்து கொந்தது பிறவித் துயரங்கள் வருத்துவதை கினைந்து வந்தது. வறுமைத் துயரால் வாழ்வு பாழாப் விடுகின்றது. பாவத்தின் பலனுய்த் துன்பங்கள் விளைந்து வருகின்றன; கோப் வறுமை ஆபத்து முகவிய பலவகை உருவங்களில் மருவி கின்று கொடிய துயரங்களைச் செப்து அவை கெடிது தொடர் கின்றன. இக்க அல்லல்கள் ஒருவனே அனுகாமல் விலகவேண் டின் பொல்லாத பாவத்தை அவன் ஈனுகாமல் ஒழுக வேண் டும். அவ்வாறு ஒழுகி வரின் விழுமிய இன்பம் பெருகி வரும். 223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/238&oldid=1326796" இலிருந்து மீள்விக்கப்பட்டது