பக்கம்:தரும தீபிகை 5.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1778 த ரும தீ பி. கை தன் வாழ்வில் தீமை படியாமல் பாதுகாத்து வருபவன் சிறக்க சேம கலங்களை விரைந்து அடைந்துகொள்கிருன். பாவப் புலே ஒழிந்தபோது அங்கே சீவ ஒளி திகழ்ந்து வருகிறது; அத ஞல் திவ்விய மகிமைகள் விளைந்து செவ்வி சுரங் துமிளிர்கின்றன. ஆவிக்கு அமுதம் அது என்றது பாவம் நீங்கிய அளவில் சீவனுக்கு உண்டாகும் திவ்விய இன்ப நிலையை விளக்கி நின் றது. கொடிய விடம்போல் பாவம் நெடிய துயர்களைச் செப் கின்றன; இனிய அமுதம்போல் தருமம் அரிய பல சுகங்களை அருளுகின்றன. அறத்தை எவ்வழியும் துணையாகக் கருதி நெறியே ஒருவன் வாழ்ந்துவரின் இம்மை மறுமை என்னும் இரண்டு நிலைகளிலும் நன்மையுடையனப்ச் செம்மையானமேன் 60LDఊశిr அவன் எய்தி மகிழ்கின்ருன். கருமம் கழுவி வரும் அளவு விழுவிய பெருமைகள் நேரே கெழுமி வருகின்றன. அறம்திறம்பாது நாளும் அரும்பொருள் காமம் துய்ப்போர் சிறந்த இவ் வுலகம் தன்னில் அளப்பரும் செல்வம் எய்தி மறங்கிளர் வடிவேல் உண்கண் வானவர் மகளிரோடும் உறங்கிடாது இன்பம் துய்க்கும் உலகினில் இனிது வாழ்வார். (கூர்மபுராணம்) தருமமே தனித்த ஞான்று தக்கதோர் துணைய தாகும்; தருமமே பொருள்கள் நாலும் தந்திடும்; வருணாாலும் தருமமெய்யாகச் செய்யும் சமயம் ஆறுடனே மற்றும் தருமமே காக்கும் வேந்தர் தடமுடி இடறும் தாளாய்! (திருப்பரங்கிரிப்புராணம்) அறநெறியே ஒழுகுவோர்க்கு உளவாம் பெருமைகளை இவை உணர்த்தியுள்ளன. எவ்வழியும் பெரு மகிமைகளை அரு ளுகின்ற இனிய கருமக்கைப் பேணி வருபவரே பேரின்பத்தைக் காணியாகக் காணுகின்ருர். அந்த இன்பக் காட்சி அதிசய மாட் சியாம். பாவம் துன்ப நிலையம்; அகனவிலகி இன்பகலம் பெறுக. 739 கெட்ட வழியில் கிளர்ந்துவரு வோன்குடிதான் பட்ட மரம்போலப் பாழ்பட்டு-முட்ட அழிந்து படுமே அவகேடு குழ்ந்தால் எழுந்து வருவார் எவர். (க) இ-ள். கெட்ட வழியில் கிளர்ந்து வரும் குடி பட்ட மரம்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/239&oldid=1326797" இலிருந்து மீள்விக்கப்பட்டது