பக்கம்:தரும தீபிகை 5.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73. பா வ ம் 1779 விரைந்து பாழ்பட்டு வெந்து அழியும்; அவகேடுகள் அயலே சூழ்ச்தபின் யாரும் உவகையாய் வாழ முடியாது என்க. o நல்லவழி கெட்டவழி என இரண்டு நெறிகள் ஏற்பட்டுள் ளன. சிவ யாத்திரை செய்கின்ற மாங்கர் இந்த வழிகளில் தொடர்ந்து போய்க்கொண்டே யிருக்கின்றனர். தன் அடியில் கடந்து செல்பவர் முடிவில் எப்படியாவது பேரின்ப விட்டை அடையும்படி செய்வது எதுவோ அது நல்ல வழி. அவ்வாறு செய்யாமல் அயலே போக்கி அலைக்கழித்து அல்லல் இழைத்து அவலப்படுத்துவது எதுவோஅது பொல்லாத கெட்ட வழியாம். முன்னது முத்திநெறி; பின்னது மூடநெறி. முதல்வழியில் செல்பவர் உத்தமராய் உயர்ந்து போகின்ருர், பின்னதில் போப வர் பித்தராயிழிந்து பெருங்துயருழந்து வருக்தி அழிகின்ருர். நெறிமுறையே ஒழுகுபவன் காலால் நடந்து செல்பவனப் மேலான நிலையை எப்துகிருன், நெறி தவறினவன் உடலால் புரண்டு செல்வன்போல் அடுதுயரங்களையே அடைகிருன். வழி விலகிய போதே பழி பாவங்கள் அவனை நன்கு பற்றிக்கொள் ளுகின்றன; கொள்ளவே எவ்வழியும் அல்லல்களையே கண்டு அழி துயரங்களையே அவன் அடைய நேர்கின்ருன். தமக்கு விளைகின்ற நன்மை தீமைகளை நாடியறிந்து கல்ல நெறியிலேயே எவரும் செல்லவேண்டும்; அவ்வாறு செல்லாத வர் அல்லலுக்கே ஆளாகின்ருர். மனிதனுடைய அறிவுக்குப் பயன் புனித கிலேயை அடைவதேயாம். அந்தப் பேற்றை இழக் தவர் பேதைகளாயிழிந்து பீழைகள் படிந்து பிழைபடுகின்றனர். 'செம்மைகலம் அறியாத சிதடர்' என அவலப் பேதைகளைக் குறித்து மாணிக்கவாசகர் இவ்வாறு கவலையோடு கூறியிருக்கிருர். ஞானகுனியராய் ஈனமடைதலால் சிதடர் என்ருர். சி கடு=குருடு. கண் இழந்த குருடர் வழிகெரி யாமல் தடுமாறித் தட்டழிதல்போல் அறிவிழந்த மூடர்கள் உரிய நெறியை உணராமல் பரிதாபமாய் வறிதே யுழலுகின்றனர். தன் உயிர்க்கு நன்மையை நாடி நடவாமல் புன்மையில் ஒடி இழிபவர் புலைத்துயரங்களையே அடைகின்ருர். இனிய நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/240&oldid=1326798" இலிருந்து மீள்விக்கப்பட்டது