பக்கம்:தரும தீபிகை 5.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1780 த ரும தீ பி ைக மைகளால் மனிதனுக்கு இன்பமும் புகழும் வருகின்றன; கொடிய இயல்புகளால் துன்பமும் பழியும் தொடர்கின்றன. உள்ளத்தில் அன்பு முதலிய பண்புகள் அமையின் அங்க மனிதனைச் சூழ்ந்து இன்ப நலன்கள் விளைகின்றன. இனிய கற் பகப் பூஞ்சோலையாய்ச் செழித்துக் கழைத்து அவன் சிறந்து விளங்குகிருன். அன்பின்றி உள்ளம் கடுமையாய்க் கொடுமை புகின் அவன் நெடுமையாய்த் துன்பங்களையே அடைய நேர் கின்ருன். பழிபாவங்கள் சார்ந்து பாலைவனம்போல் படுசூடேறி அவனுடைய வாழ்வு கடுமையாய்ப் பாழ்படுகின்றது. கெட்டவழியில் கிளர்வோன் குடி பட்ட மரம்போல் பாழ்படும். என்றது அவலமான அழிவு நிலைகளை விழிதெரிந்து தெளிவடைய வந்தது. பாவத் தீ பற்றியதால் குடி பட்டழிந்தது. இலை களிர் கிளை கழை அரும்பு மலர் காப் கனி முதலியன கிறைந்து குளிர் கிழலோடு குலாவி நிற்கும் குறும் பூம்பொழில் போல் புண்ணியவான் குடி பொலிந்து விளங்குகிறது; வறுமை சிறுமை பிணி முதலியன பெருகிப் பாவியின் குடும்பம் படுதுய ரடைகின்றது. அழி துயர்கள் பழி வழியால் வருகின்றன. வறியவன் இளமை போல் வாடிய சினேயவாய்ச் சிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி யார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட்டான் இறுதிபோல் வேரொடு மரம் வெம்ப விரிகதிர் தெறுதலின், அலவுற்றுக் குடி கூவ ஆறின்றிப் பொருள் வெஃகிக் கொலேயஞ்சா வினேவரால் கோல்கோடி யவன் நிழல் உலகுபோல் உலறிய உயர்மர வெஞ்சுரம்.” (கலி, 10) இலை தழையின்றிக் காய்ந்து கரிந்துகிற்கும் பாலைவனத்து மரங்களைக் குறித்து இது உரைத்துள்ளது. வறியவன் இளமை போல் கிளைகள் வாடி, சிறியவன் செல்வம்போல் நிழல் இன்றி, கெட்டவன் வாழ்வுபோல் கேடுமண்டி, கொடுங்கோல் அரசன் குடிகள்போல் உலர்ந்து வெம்பி மரங்கள் மறுகி நின்றன எனப் 'பெருங்கடுங்கோ என்னும் புலவர் பெருமான் இவ்வாறு நிலைமை களை விளக்கியிருக்கிருர். உவமை நிலைகள் ஊன்றி உணரவுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/241&oldid=1326799" இலிருந்து மீள்விக்கப்பட்டது