பக்கம்:தரும தீபிகை 5.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I'788 த ரும தீ பி. கை றனர். அரிய நீர்மைகளைக் கொண்டே தெய்வங்களையும் மனிதர் பெருமையாப் பேசி வருகின்றனர். புகழால் உயர்ந்த தெய்வங் களை ஆசையோடு பூசனைகள் புரிந்து வழிபடுகின்றனர். கீர்த்திகள் வார்க்கைகளால் துதிக்கப் படுகலால் அவை கீர்த்தனைகள் என வந்தன. புண்ணிய நீர்மைகளை எவரும் கண்ணியமா எண்ணி இன்புறுகின்றனர். புகழ் மனம் கமழ்ந்து வருகலால் அவை உயரொளி விசி எவ்வழியும் திவ்வியமாய் உலாவி வருகின்றன. “மன்னுயிர் முதல்வனே ஆதலின் கின்னேர் அனேயைகின் புகழொடும் பொலிந்தே; கின் ஒக்கும் புகழ் நிழலவை பொன் ஒக்கும் உடையவை எண்ணிறந்த புகழவை எழில் மார்பினவை.' (பரிபாடல்) திருமால் இவ்வாறு புகழப்பட்டுள்ளார்; அளவிடலரிய புகழ்களையுடையவர்; புகழ் ஆகிய நிழலிலே பொலிந்து விளங்கு பவ்ர் என்ற கல்ை புகழ் எவ்வளவு உயர்வுடையது; எத்துணை மகிமை வாய்ந்தது! என்பதை உய்த்துணர்ந்து கொள்ளலாம். தேவ தேவனும் புகழால் சீவ ஒளி மேவிக் திவ்வியமாப் விளங்கு கின்ருன். பரமனுக்கும் புகழ் பரிசு கந்து வரிசை செய்துள்ளது. இத்தகைய புகழை மனிதன் ஒரளவாவது நேரே சம்பாதித் துக் கொள்ள வேண்டும். வித்திலிருந்து விளைவுகள் கோன்றுதல் போல் நல்ல குணங்களிலிருந்தே புகழ்கள் தோன்றுகின்றன. புகழை விளைக்கத் தக்க இனிய நீர்மைகளை எவ்வளவுக்கு எவ்வ ளவு மனிதன் மருவி வருகின்ருனே அவ்வளவுக்கு அவ்வளவு அவன் புனிதமான மகிமையுடையவனப் உயர்ந்து திகழ்கிருன். பெற்ற புகழின் அளவைக் கொண்டே ஒருவன் பிறந்த பிறப்பு மதிக்கப் படுகிறது. எவன் புகழ் பெறவில்லையோ அவன் பிறப்பு பழிபட்டதாய் இழிந்து எவ்வழியும் பாழ்படுகின்றது. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன் ருமை நன்று." (குறள், 256) மனிதன் என்று ஒருவன் பிறக்கால் புகழுக்கு உரிய குணங்களோடு அவன் பிறக்க வேண்டும்; அங்கனம் இல்லையா ல்ை அவன் பிறப்பதை விடப் பிறவாமல் ஒழிந்து போவதே நல்லது எனத் தேவர் இங்கனம் வரைந்து கூறி யிருக்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/249&oldid=1326807" இலிருந்து மீள்விக்கப்பட்டது