பக்கம்:தரும தீபிகை 5.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்து நான்காவது அதிகாரம். பு க ழ், அஃதாவது அரிய செயல்களால் எய்தம் இனிய இசை. ஒருவனுடைய பேர் சீரும் சிறப்புமாய் உயர்ந்து யாரும் உவந்து பேச ஒளி விசி வருவது புகழ் என வங்கது. பழி பாவங்கள் 'நீங்கிய விழுமியோர்பால் விளைவது ஆகலால் அவற்றின் பின் இது வைக்கப்பட்டது. வைப்பு நிலை உய்த்து உணர வுற்றது. 731. உற்ற பிறவிக் குரியபயன் ஒண்புகழே: பெற்றவனே எவ்வழியும் பேறுடையான்-மற்றவன் மானுடய்ை வந்தாலும் மாண்பிழந்து போனமையால் ஊனுடம்பே இல்லே உயிர். (க) இ-ள். அரிய மனிதப் பிறவிக்கு உரிய பயன் இனிய புகழே; அதனைப் பெற்றவனே சிறந்த நிலையில் பிறந்தவன் ஆகின்ருன்; அங்கனம் பெருதவன் பிறந்திருந்தும் பிறவாகவய்ை இழிந்து போகின்ருன்; இழிபழி தெளிந்து உயர்ந்து கொள்க என்பதாம். பிறவிகளுள் மனிதப்பிறப்பு உயர்ந்தது. மிருகம் பறவை முதலியன சிறந்த அறிவு நலம் அமையப் பெருகன ஆதலால் அவை இழிக்கனவாய் நின்றன. நன்மை தீமைகளை காடி அறிந்து உண்மை தெளிந்து உறுதியான உயர் நிலைகளை அடைய வுரிய தகுதி வாய்ந்துள்ளமையால் மனித மரபு வேறு பிராணி வகைகளினும் மேன்மையான மதிப்பு மிகுந்து கின்றது. சீவ கோடிகளுடைய செயல் இயல்கள் அதிசய விசித்திரங்களுடை யன. யூகித்து உணர்வதில் உயர்ச்சிகள் வேகித்து விளைந்துள்ளன. யூக விவேகங்களும் இனிய பண்பாடுகளும் மனித சாதியை மகிமைப் படுத்தி வருகின்றன. அரிய கருமங்கள் உரிய பயன் களோடு மருவி வரும்பொழுது அவை பெரிய கருமங்களாய்ப் பெருகி நின்று யாண்டும் பேர் பெற்று நீண்டு நிலவு கின்றன. ஒரு மனிதனே உலகம் புகழ்ந்த போற்ற வேண்டுமானல் அவனிடம் சிறக்க தன்மைகள் அமைந்திருக்க வேண்டும், உயர்ந்த நீர்மையாளரை எவரும் வியந்து போற்ற நேர்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/248&oldid=1326806" இலிருந்து மீள்விக்கப்பட்டது