பக்கம்:தரும தீபிகை 5.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1786 த ரும தீபிகை ஆபத்தால் அபயம்என்றே அடைந்தோரை விட்டோரும் ஆதியாய பாபத்தாரும் பலரைப் பழிப்போரும் படுகரகில் பதைப்பக் கண்டான். (3) (இராமாயணம்) இராவணன் வெற்றிவிாளுய்த் திக்குவிசயம் செய்தபோது எமலோகத்துக்குப் போனன். அப்பொழுது அங்கே ஒரிடத்தில் அவன் நேரே கண்ட காட்சிகளை இவை காட்டியுள்ளன. இங்கே குறித்திருக்கிற பாவங்களையும் அவற்றைச் செய்தவர் படுகிற நரக துயரங்களையும் கருதிக் காண்பவர் எவரும் உள்ளம் மறுகி இரங்குவர். செய்த தீவினை தீயாய் வதைக்கிறது. பாபத்தார் பலர் படுநரகில் பதைப்பக் கண்டான் என்றகளுல் அங்கே அவர் பட்டிருக்கின்ற அடு துயரங்களை அறிந்துகொள் கிருேம். பாவம் செய்தால் இப்படி அவல நிலைகளில் அழுக்தி அழிதுயரங்களை அனுபவிக்க நேரும் ஆதலால் அதனை ஒழிந்து ஒழுகுங்கள் என உலக மக்களுக்கு நூல்கள் உணர்த்திவருகின் றன. உண்மையை ஒர்ந்து உணர்ந்தவர் நன்மை யுறுகின்றனர். பொல்லாத பாவம் புலோகிரகாம்; புண்ணியமோ எல்லா மகிழ்வுக் கிடம். * அல்லதை ஒல்லையில் விலக்கி ஒழி, கல்லதை நாடிச் செய்து நலம் பல பெறுக. அப் பேறு பேரின்பமாம். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு பாவம் மிகவும் கொடியது. அடுதுயர் புரிவது. அல்லலே தருவது. நரகில் தள்ளி நாசம் செய்வது. பிறவித் துன்பங்களைப் பெருக்கி விடுவது. அதனை அணுகினல் அவலமேயாம். ஆவி அலமந்து அழியும். பாவி என்று பாழ் படலாகாது. தீய சஞ்சு என அதனே அஞ்சி விலகுக. புண்ணியம் புரிந்து புகழ்மிகப் பெறுக. எக வது அதிகாரம் முற்றிற்று.

  • -i- e-em
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/247&oldid=1326805" இலிருந்து மீள்விக்கப்பட்டது